சங்கீதம் 85 : 1 (ECTA)
நாட்டின் நலனுக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் புகழ்ப்பா) ஆண்டவரே! உமது நாட்டின்மீது அருள் கூர்ந்தீர்; யாக்கோபினரை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தீர்.
சங்கீதம் 85 : 2 (ECTA)
உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்; அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மறைத்துவிட்டீர். (சேலா)
சங்கீதம் 85 : 3 (ECTA)
உம் சினம் முழுவதையும் அடக்கிக் கொண்டீர்; கடும் சீற்றம் கொள்வதை விலக்கிக் கொண்டீர்.
சங்கீதம் 85 : 4 (ECTA)
எம் மீட்பராம் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்; எங்கள்மீது உமக்குள்ள சினத்தை அகற்றிக்கொள்ளும்.
சங்கீதம் 85 : 5 (ECTA)
என்றென்றுமா எங்கள்மேல் நீர் சினம் கொள்வீர்? தலைமுறைதோறுமா உமது கோபம் நீடிக்கும்?
சங்கீதம் 85 : 6 (ECTA)
உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு, எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ?
சங்கீதம் 85 : 7 (ECTA)
ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
சங்கீதம் 85 : 8 (ECTA)
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; அவர்களோ மடமைக்குத் திரும்பிச் செல்லலாகாது.
சங்கீதம் 85 : 9 (ECTA)
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். [* நீத 4:6-22; 7:1- 23 ]
சங்கீதம் 85 : 10 (ECTA)
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
சங்கீதம் 85 : 11 (ECTA)
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். [* நீத 7:25; 8:12.. ]
சங்கீதம் 85 : 12 (ECTA)
நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம்நாடு நல்கும்.
சங்கீதம் 85 : 13 (ECTA)
நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13