சங்கீதம் 84 : 1 (ECTA)
திருக்கோவிலுக்காக ஏங்குதல்
(பாடகர் தலைவர்க்கு: ‛காத்து’ நகர்ப் பண்; கோராகியரின் புகழ்ப்பா)
படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!
சங்கீதம் 84 : 2 (ECTA)
என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.
சங்கீதம் 84 : 3 (ECTA)
படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது.
சங்கீதம் 84 : 4 (ECTA)
உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். (சேலா)
சங்கீதம் 84 : 5 (ECTA)
உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர் பேறு பெற்றோர்; அவர்களது உள்ளம்
சீயோனுக்குச் செல்லும்
நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது.
சங்கீதம் 84 : 6 (ECTA)
வறண்ட ‛பாக்கா’ பள்ளத்தாக்கை அவர்கள் கடந்து செல்கையில், அது நீருற்றுகள் உள்ள இடமாக மாறுகின்றது; முதல் பருவமழை அதனை நீர்நிலைகள் நிறைந்த இடமாக்கும்.
சங்கீதம் 84 : 7 (ECTA)
அவர்கள் நடந்து செல்கையில் மேலும் மேலும் வலிமை பெறுகின்றார்கள்; பின்பு, சீயோனின் தெய்வங்களின் இறைவனைக் காண்பார்கள்.
சங்கீதம் 84 : 8 (ECTA)
படைகளின் ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்! யாக்கோபின் கடவுளே, எனக்குச் செவிசாய்த்தருளும்! (சேலா)
சங்கீதம் 84 : 9 (ECTA)
எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்! நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும்! [* நீத 4:6-22; 7:1- 23 ]
சங்கீதம் 84 : 10 (ECTA)
வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒருநாளே மேலானது; பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும், என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது.
சங்கீதம் 84 : 11 (ECTA)
ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் நமக்குத் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்; மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார். [* நீத 7:25; 8:12.. ]
சங்கீதம் 84 : 12 (ECTA)
படைகளின் ஆண்டவரே! உம்மை நம்பும் மானிடர் நற்பேறு பெற்றோர்!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12