சங்கீதம் 83 : 1 (ECTA)
{இஸ்ரயேலின் எதிரிகளது வீழ்ச்சிக்காக மன்றாடல்[BR](ஆசாபின் புகழ்ப்பாடல்)} [PS] [QS][SS] கடவுளே! மௌனமாய் இராதேயும்;[SE][SS] பேசாமல் இராதேயும்;[SE][SS] இறைவனே! அமைதியாய் இராதேயும்.[SE][QE]
சங்கீதம் 83 : 2 (ECTA)
[QS][SS] ஏனெனில், உம் எதிரிகள்[SE][SS] அமளி செய்கின்றார்கள்;[SE][SS] உம்மை வெறுப்போர்[SE][SS] தலைதூக்குகின்றார்கள்.[SE][QE]
சங்கீதம் 83 : 3 (ECTA)
[QS][SS] உம் மக்களுக்கு எதிராக[SE][SS] வஞ்சகமாய்ச் சதி செய்கின்றார்கள்;[SE][SS] உம் பாதுகாப்பில் உள்ளோர்க்கு எதிராகச்[SE][SS] சூழ்ச்சி செய்கின்றார்கள்.[SE][QE]
சங்கீதம் 83 : 4 (ECTA)
[QS][SS] அவர்கள் கூறுகின்றார்கள்;[SE][SS] ‛ஓர் இனமாக அவர்களை இல்லாதவாறு[SE][SS] ஒழித்திடுவோம்;[SE][SS] இஸ்ரயேலின் பெயரை[SE][SS] எவரும் நினையாதவாறு செய்திடுவோம்.’[SE][QE]
சங்கீதம் 83 : 5 (ECTA)
[QS][SS] அவர்கள் ஒருமனப்பட்டுச்[SE][SS] சதி செய்கின்றார்கள்;[SE][SS] உமக்கு எதிராக[SE][SS] உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.[SE][QE]
சங்கீதம் 83 : 6 (ECTA)
[QS][SS] ஏதோமின் கூடாரத்தார், இஸ்மயேலர்,[SE][SS] மோவாபியர், அக்ரியர்,[SE][QE]
சங்கீதம் 83 : 7 (ECTA)
[QS][SS] கெபாலியர், அம்மோனியர், அமலேக்கியர்,[SE][SS] பெலிஸ்தியர் மற்றும்[SE][SS] தீர்வாழ் மக்களே அவர்கள்.[SE][QE]
சங்கீதம் 83 : 8 (ECTA)
[QS][SS] அவர்களோடு அசீரியரும் சேர்ந்துகொண்டு,[SE][SS] லோத்தின் மைந்தருக்கு[SE][SS] வலக்கையாய் இருந்தனர். (சேலா)[SE][QE]
சங்கீதம் 83 : 9 (ECTA)
[QS][SS] மிதியானுக்கும், கீசோன் ஆற்றின் அருகே[SE][SS] சீசராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போல,[SE][SS] அவர்களுக்கும் செய்தருளும்.[SE][QE]
சங்கீதம் 83 : 10 (ECTA)
[QS][SS] அவர்கள் ஏந்தோரில் அழிக்கப்பட்டார்கள்;[SE][SS] அவர்கள் மண்ணுக்கு உரமானார்கள். [* நீத 4:6-22; 7:1-23 ] [SE][QE]
சங்கீதம் 83 : 11 (ECTA)
[QS][SS] ஓரேபுக்கும் செயேபுக்கும் செய்ததுபோல்[SE][SS] அவர்களின் உயர்குடி மக்களுக்கும்[SE][SS] செய்தருளும்! [BR] செபாருக்கும் சல்முன்னாவுக்கும்[SE][SS] செய்ததுபோல் அவர்களின்[SE][SS] தலைவர்களுக்கும் செய்தருளும்.[SE][QE]
சங்கீதம் 83 : 12 (ECTA)
[QS][SS] ஏனெனில், ‛கட‌வுளின் மேய்ச்சல் நிலத்தை[SE][SS] நமக்கு உரிமையாக்கிக் கொள்வோம்’[SE][SS] என்று அவர்கள் கூறினார்கள். [* நீத 7:25; 8:12.[QE] ] [SE][QE]
சங்கீதம் 83 : 13 (ECTA)
[QS][SS] என் கடவுளே! சூறாவளியில் புழுதியென,[SE][SS] காற்றில் பதரென[SE][SS] அவர்களை ஆக்கியருளும்.[SE][QE]
சங்கீதம் 83 : 14 (ECTA)
[QS][SS] நெருப்பு காட்டை எரிப்பது போலவும்,[SE][SS] தீக்கனல் மலைகளைச்[SE][SS] சுட்டெரிப்பது போலவும்[SE][SS] அவர்களுக்குச் செய்தருளும்.[SE][QE]
சங்கீதம் 83 : 15 (ECTA)
[QS][SS] உமது புயலால்[SE][SS] அவர்களைத் துரத்திவிடும்![SE][SS] உமது சூறாவளியால்[SE][SS] அவர்களைத் திகிலடையச் செய்யும்.[SE][QE]
சங்கீதம் 83 : 16 (ECTA)
[QS][SS] ஆண்டவரே, மானக்கேட்டினால்[SE][SS] அவர்கள் முகத்தை மூடும்;[SE][SS] அப்பொழுதுதான் அவர்கள்[SE][SS] உமது பெயரை நாடுவார்கள்.[SE][QE]
சங்கீதம் 83 : 17 (ECTA)
[QS][SS] அவர்கள் என்றென்றும்[SE][SS] வெட்கிக் கலங்குவார்களாக![SE][SS] நாணமுற்று அழிந்து போவார்களாக![SE][QE]
சங்கீதம் 83 : 18 (ECTA)
[QS][SS] ‛ஆண்டவர்’ என்னும்[SE][SS] பெயர் தாங்கும் உம்மை,[SE][SS] உலகனைத்திலும் உன்னதரான உம்மை,[SE][SS] அவர்கள் அறிந்து கொள்வார்களாக![SE][PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

BG:

Opacity:

Color:


Size:


Font: