சங்கீதம் 82 : 1 (ECTA)
அனைத்து உலகின் அரசர்
(ஆசாபின் புகழ்ப்பா) தெய்வீக சபையில் கடவுள் எழுந்தருளியிருக்கின்றார்; தெய்வங்களிடையே அவர் நீதித்தீர்ப்பு வழங்குகின்றார்.
சங்கீதம் 82 : 2 (ECTA)
‛எவ்வளவு காலம் நீங்கள் நேர்மையற்ற தீர்ப்பு வழங்குவீர்கள்? எவ்வளவு காலம் பொல்லாருக்குச் சலுகை காட்டுவீர்கள்? (சேலா)
சங்கீதம் 82 : 3 (ECTA)
எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும் நீதி வழங்குங்கள்; சிறுமையுற்றோர்க்கும் ஏழைகட்கும் நியாயம் வழங்குங்கள்!
சங்கீதம் 82 : 4 (ECTA)
எளியோரையும் வறியோரையும் விடுவியுங்கள்! பொல்லாரின் பிடியினின்று அவர்களுக்கு விடுதலை அளியுங்கள்!
சங்கீதம் 82 : 5 (ECTA)
உங்களுக்கு அறிவுமில்லை; உணர்வுமில்லை; நீங்கள் இருளில் நடக்கின்றீர்கள்; பூவுலகின் அடித்தளங்கள் அனைத்துமே அசைந்துவிட்டன.
சங்கீதம் 82 : 6 (ECTA)
‛நீங்கள் தெய்வங்கள்; நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள். [* யோவா 10:34.. ]
சங்கீதம் 82 : 7 (ECTA)
ஆயினும், நீங்களும் மனிதர்போன்று மடிவீர்கள்; தலைவர்களுள் ஒருவர் போல வீழ்வீர்கள்’ என்றேன்.
சங்கீதம் 82 : 8 (ECTA)
கடவுளே, உலகில் எழுந்தருளும், அதில் நீதியை நிலைநாட்டும்; ஏனெனில், எல்லா நாட்டினரும் உமக்கே சொந்தம்.
❮
❯
1
2
3
4
5
6
7
8