சங்கீதம் 81 : 1 (ECTA)
திருவிழாப் பாடல்
(பாடகர் தலைவனுக்கு: ‘காத்து’ நகர்ப்பண்; ஆசாபுக்கு உரியது)
நமது வலிமையாகிய கடவுளை மகிழ்ந்து பாடுங்கள்; யாக்கோபின் கடவுளைப் புகழ்ந்து ஏத்துங்கள்.
சங்கீதம் 81 : 2 (ECTA)
இன்னிசை எழுப்புங்கள்; மத்தளம் கொட்டுங்கள்; யாழும் சுரமண்டலமும் இசைந்து இனிமையாய்ப் பாடுங்கள்.
சங்கீதம் 81 : 3 (ECTA)
அமாவாசையில், பௌர்ணமியில், நமது திருவிழாநாளில்
எக்காளம் ஊதுங்கள். [* எண் 10: 10 ]
சங்கீதம் 81 : 4 (ECTA)
இது இஸ்ரயேல் மக்களுக்குரிய விதிமுறை; யாக்கோபின் கடவுள் தந்த நீதிநெறி.
சங்கீதம் 81 : 5 (ECTA)
அவர் எகிப்துக்கு எதிராகச் சென்றபொழுது யோசேப்புக்கு அளித்த சான்று இதுவே. அப்பொழுது நான் அறியாத மொழியைக் கேட்டேன்.
சங்கீதம் 81 : 6 (ECTA)
தோளினின்று உன் சுமையை அகற்றினேன்; உன் கைகள் கூடையினின்று விடுதலை பெற்றன.
சங்கீதம் 81 : 7 (ECTA)
துன்ப வேளையில் என்னை நோக்கி மன்றாடினீர்கள்; நான் உங்களை விடுவித்தேன்; இடிமுழங்கும் மறைவிடத்தினின்று நான் உங்களுக்கு மறுமொழி கூறினேன்; மெரிபாவின் நீருற்று அருகில் உங்களைச் சோதித்தேன். (சேலா) [* விப 17:7; எண் 20: 13 ]
சங்கீதம் 81 : 8 (ECTA)
என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன்; இஸ்ரயேலரே, நீங்கள் எனக்குச் செவிசாய்த்தால், எவ்வளவு நலமாயிருக்கும்!
சங்கீதம் 81 : 9 (ECTA)
உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது. [* விப 20:2-3; இச 5:6-7.. ]
சங்கீதம் 81 : 10 (ECTA)
உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்துவந்த கடவுளாகிய ஆண்டவர் நானே; உங்கள் வாயை விரிவாகத் திறங்கள்; நான் அதை நிரப்புவேன். [* விப 20:2-3; இச 5:6-7.. ]
சங்கீதம் 81 : 11 (ECTA)
ஆனால் என் மக்கள் என் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; இஸ்ரயேலர் எனக்குப் பணியவில்லை.
சங்கீதம் 81 : 12 (ECTA)
எனவே, அவர்கள் தங்கள் எண்ணங்களின்படியே நடக்குமாறு, அவர்களின் கடின இதயங்களிடம் அவர்களை விட்டுவிட்டேன்.
சங்கீதம் 81 : 13 (ECTA)
என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்.
சங்கீதம் 81 : 14 (ECTA)
நான் விரைவில் அவர்கள் எதிரிகளை அடக்குவேன், என் கை அவர்களின் பகைவருக்கு எதிராகத் திரும்பும்.
சங்கீதம் 81 : 15 (ECTA)
ஆண்டவரை வெறுப்போர் அவர்முன் கூனிக்குறுகுவர்; அவர்களது தண்டனைக் காலம் என்றென்றுமாய் இருக்கும்.
சங்கீதம் 81 : 16 (ECTA)
ஆனால், உங்களுக்கு நயமான கோதுமையை உணவாகக் கொடுப்பேன்; உங்களுக்கு மலைத் தேனால் நிறைவளிப்பேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16