சங்கீதம் 8 : 1 (ECTA)
இறைவனின் மாட்சியும் மானிடரின் மேன்மையும்
(பாடகர் தலைவர்க்கு: ‘காத்து’ நகர்ப் பண்; தாவீதின் புகழ்ப்பா) ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு
மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது.
சங்கீதம் 8 : 2 (ECTA)
பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் வலிமையை உறுதிப்படுத்தி உம் பகைவரை ஒடுக்கினீர்; எதிரியையும் பழிவாங்குவோரையும் அடக்கினீர். [* மத் 21: 16 ]
சங்கீதம் 8 : 3 (ECTA)
உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது,
சங்கீதம் 8 : 4 (ECTA)
மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? [* யோபு 7:17-18; திபா 144:3; எபி 2:6- 8 ]
சங்கீதம் 8 : 5 (ECTA)
ஆயினும், அவர்களைக் கடவுளாகிய* உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். [* ‘வானதூதர்க்கு’ என்றும் மொழிபெயர்க்கலாம்.. ]
சங்கீதம் 8 : 6 (ECTA)
உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். [* 1 கொரி 15:27; எபே 1:22; எபி 2: 8 ]
சங்கீதம் 8 : 7 (ECTA)
ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள்,
சங்கீதம் 8 : 8 (ECTA)
வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.
சங்கீதம் 8 : 9 (ECTA)
ஆண்டவரே, எங்கள் தலைவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!
❮
❯
1
2
3
4
5
6
7
8
9