சங்கீதம் 78 : 1 (ECTA)
கடவுளும் அவர்தம் மக்களும்
(ஆசாபின் அறப்பாடல்) என் மக்களே, என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; என் வாய்மொழிகளுக்குச் செவிகொடுங்கள். * 1 சாமு ).
சங்கீதம் 78 : 2 (ECTA)
நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்; முற்காலத்து மறைசெய்திகளை எடுத்துரைப்பேன். * 1 சாமு ).
சங்கீதம் 78 : 3 (ECTA)
நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை, எம் மூதாதையர் எமக்கு விரித்துரைத்தவை – இவற்றை உரைப்போம். * 1 சாமு ).
சங்கீதம் 78 : 4 (ECTA)
அவர்களின் பிள்ளைகளுக்கு நாங்கள் அவற்றை மறைக்க மாட்டோம்; வரவிருக்கும் தலைமுறைக்கு ஆண்டவரின் புகழ்மிகு, வலிமைமிகு செயல்களையும் அவர் ஆற்றிய வியத்தகு செயல்களையும் எடுத்துரைப்போம். * 1 சாமு ).
சங்கீதம் 78 : 5 (ECTA)
யாக்கோபுக்கென அவர் நியமங்களை வகுத்தார்; இஸ்ரயேலுக்கெனத் திருச்சட்டத்தை ஏற்படுத்தினார்; இதனையே தம் பிள்ளைகளுக்கும் கற்பிக்குமாறு நம் மூதாதையர்க்கு அவர் கட்டளையிட்டார். * 1 சாமு ).
சங்கீதம் 78 : 6 (ECTA)
வரவிருக்கும் தலைமுறையினர் இவற்றை அறிந்திடவும், இனிப் பிறக்கவிருக்கும் பிள்ளைகள் – இவர்கள் தம் புதல்வர்களுக்கு ஆர்வத்துடன் கற்றுக்கொடுக்கவும், * 1 சாமு ).
சங்கீதம் 78 : 7 (ECTA)
அதனால், அவர்கள் கடவுள்மீது நம்பிக்கை வைக்கவும், இறைவனின் செயல்களை மறவாதிருக்கவும், அவர்தம் கட்டளைகளைக்
கடைப்பிடிக்கவும், * 1 சாமு ).
சங்கீதம் 78 : 8 (ECTA)
தங்கள் மூதாதையரைப்போல், எதிர்ப்பு மனமும், அடங்காக் குணமும் கொண்ட தலைமுறையாகவும், நேரிய உள்ளமற்றவர்களாகவும் இறைவன்மீது உண்மைப் பற்று
அற்றவர்களாகவும் இராதபடி அவர் கட்டளையிட்டார். * 1 சாமு ).
சங்கீதம் 78 : 9 (ECTA)
வில் வீரரான எப்ராயிம் மக்கள், போரில் புறங்காட்டி ஓடினர். * 1 சாமு ).
சங்கீதம் 78 : 10 (ECTA)
அவர்கள் கடவுளோடு செய்துகொண்ட உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கவில்லை; அவரது திருச்சட்டத்தைப் பின்பற்ற மறுத்துவிட்டனர். * 1 சாமு ).
சங்கீதம் 78 : 11 (ECTA)
அவர்தம் செயல்களையும் அவர் ஆற்றிய அருஞ்செயல்களையும் அவர்கள் மறந்தனர். * 1 சாமு ).
சங்கீதம் 78 : 12 (ECTA)
எகிப்து நாட்டில், சோவான் சமவெளியில் அவர்களின் மூதாதையர் காணுமாறு அவர் வியத்தகு செயல்கள் பல புரிந்தார்; [* விப 7:8-12: 35 ;1 சாமு ). ]
சங்கீதம் 78 : 13 (ECTA)
கடலைப் பிரித்து அவர்களை வழிநடத்தினார்; தண்ணீரை அணைக்கட்டுப்போல நிற்கும்படி செய்தார்; [* விப 14:21- 22 ;1 சாமு ). ]
சங்கீதம் 78 : 14 (ECTA)
பகலில் மேகத்தினாலும் இரவு முழுவதும் நெருப்பின் ஒளியாலும் அவர்களை வழி நடத்தினார். [* விப 13:21- 23 ;1 சாமு ). ]
சங்கீதம் 78 : 15 (ECTA)
பாலைநிலத்தில் பாறைகளைப் பிளந்தார்; ஆழத்தினின்று பொங்கிவருவது போன்ற நீரை அவர்கள் நிறைவாகப் பருகச் செய்தார்; [* விப 17:1-7; எண் 20:2- 13 ;1 சாமு ). ]
சங்கீதம் 78 : 16 (ECTA)
பாறையினின்று நீரோடைகள் வெளிப்படச் செய்தார்; ஆறுகளென நீரை அவர் பாய்ந்தோடச் செய்தார். [* விப 17:1-7; எண் 20:2- 13 ;1 சாமு ). ]
சங்கீதம் 78 : 17 (ECTA)
ஆயினும், அவர்கள் அவருக்கெதிராகத் தொடர்ந்து பாவம் செய்தனர்; வறண்ட நிலத்தில் உன்னதருக்கு எதிராய் எழுந்தனர். * 1 சாமு ).
சங்கீதம் 78 : 18 (ECTA)
தம் விருப்பம்போல் உணவு கேட்டு வேண்டுமென்றே இறைவனைச் சோதித்தனர். [* விப 16:2-15; எண் 11:4-23; 31- 35 ;1 சாமு ). ]
சங்கீதம் 78 : 19 (ECTA)
அவர்கள் கடவுளுக்கு எதிராக இவ்வாறு பேசினார்கள்: ‘பாலை நிலத்தில் விருந்தளிக்க இறைவனால் இயலுமா? [* விப 16:2-15; எண் 11:4-23; 31- 35 ;1 சாமு ). ]
சங்கீதம் 78 : 20 (ECTA)
உண்மைதான்! அவர் பாறையை அதிரத் தட்டினார்; நீர் பாய்ந்து வந்தது; ஆறுகள் கரைபுரண்டு ஓடின. ஆயினும், அப்பமளிக்க இயலுமா அவரால்? தம் மக்களுக்கு இறைச்சி தர முடியுமா?’ [* விப 16:2-15; எண் 11:4-23; 31- 35 ;1 சாமு ). ]
சங்கீதம் 78 : 21 (ECTA)
எனவே, இதைக் கேட்ட ஆண்டவர் சினங்கொண்டார்; நெருப்பு யாக்கோபுக்கு எதிராய்க் கிளர்ந்தெழுந்தது. இஸ்ரயேல்மீது அவரது சினம் பொங்கியெழுந்தது. [* விப 16:2-15; எண் 11:4-23; 31- 35 ;1 சாமு ). ]
சங்கீதம் 78 : 22 (ECTA)
ஏனெனில், அவர்கள் கடவுள்மீது பற்றுறுதி கொள்ளவில்லை; அவர் காப்பார் என்று நம்பவில்லை. [* விப 16:2-15; எண் 11:4-23; 31- 35 ;1 சாமு ). ]
சங்கீதம் 78 : 23 (ECTA)
ஆயினும், மேலேயுள்ள வானங்களுக்கு அவர் கட்டளையிட்டார்; விண்ணகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார். [* விப 16:2-15; எண் 11:4-23; 31- 35 ]
சங்கீதம் 78 : 24 (ECTA)
அவர்கள் உண்பதற்காக மன்னாவை மழையெனப் பொழியச் செய்தார்; அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார். [* விப 16:2-15; எண் 11:4-23; 31- 35 ; யோவா 6: 31. ]
சங்கீதம் 78 : 25 (ECTA)
வான தூதரின் உணவை மானிடர் உண்டனர்; அவர்களுக்கு வேண்டியமட்டும் உணவுப் பொருளை அவர் அனுப்பினார். [* விப 16:2-15; எண் 11:4-23; 31- 35 ]
சங்கீதம் 78 : 26 (ECTA)
அவர் விண்ணுலகினின்று கீழ்க்காற்றை இறங்கிவரச் செய்தார்; தம் ஆற்றலினால் தென்காற்றை அழைத்துவந்தார். [* விப 16:2-15; எண் 11:4-23; 31- 35 ]
சங்கீதம் 78 : 27 (ECTA)
அவர் இறைச்சியைத் துகள்துகளென அவர்கள்மீது பொழிந்தார்; இறகுதிகழ் பறவைகளைக் கடற்கரை மணலென வரவழைத்தார். [* விப 16:2-15; எண் 11:4-23; 31- 35 ]
சங்கீதம் 78 : 28 (ECTA)
அவற்றை அவர்தம் பாளையத்தின் நடுவிலும் கூடாரத்தைச் சுற்றிலும் விழச்செய்தார். [* விப 16:2-15; எண் 11:4-23; 31- 35 ]
சங்கீதம் 78 : 29 (ECTA)
அவர்கள் உண்டனர்; முற்றிலுமாய் நிறைவடைந்தனர்; அவர்கள் விரும்பியவற்றையே அவர் அவர்களுக்கு அளித்தார். [* விப 16:2-15; எண் 11:4-23; 31- 35 ]
சங்கீதம் 78 : 30 (ECTA)
அவர்களது பெருந்தீனி வேட்கை தணியுமுன்பே, அவர்கள் வாயிலில் உணவு இருக்கும் பொழுதே, [* விப 16:2-15; எண் 11:4-23; 31- 35 ]
சங்கீதம் 78 : 31 (ECTA)
கடவுளின் சினம் அவர்களுக்கு எதிராக மூண்டெழுந்தது; அவர்களுள் வலியோரை அவர் கொன்றார்; இஸ்ரயேலின் இளைஞரை வீழ்த்தினார். [* விப 16:2-15; எண் 11:4-23; 31- 35 ]
சங்கீதம் 78 : 32 (ECTA)
இவையெல்லாம் நிகழ்ந்த பின்னும், அவர்கள் தொடர்ந்து பாவம் செய்தார்கள்; அவர்தம் வியத்தகு செயல்களில் நம்பிக்கை கொள்ளவில்லை.
சங்கீதம் 78 : 33 (ECTA)
ஆகையால், அவர்களது வாழ்நாளை மூச்சென மறையச் செய்தார்; அவர்களது ஆயுளைத் திடீர்த் திகிலால் முடிவுறச் செய்தார்.
சங்கீதம் 78 : 34 (ECTA)
அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர்; மனம் மாறி இறைவனைக் கருத்தாய் நாடினர்.
சங்கீதம் 78 : 35 (ECTA)
கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும் உன்னதரான இறைவன் தங்கள் மீட்பர் என்பதையும் அவர்கள் நினைவில் கொண்டனர்.
சங்கீதம் 78 : 36 (ECTA)
ஆயினும், அவர்கள் உதட்டளவிலேயே அவரைப் புகழ்ந்தார்கள்; தங்கள் நாவினால் அவரிடம் பொய் சொன்னார்கள்.
சங்கீதம் 78 : 37 (ECTA)
அவர்கள் இதயம் அவரைப் பற்றிக்கொள்வதில் உறுதியாய் இல்லை; அவரது உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
சங்கீதம் 78 : 38 (ECTA)
அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார்; அவர்களை அழித்துவிடவில்லை, பலமுறை தம் கோபத்தை அடக்கிக்கொண்டார். தம் சினத்தையெல்லாம் அவர்களுக்கு எதிராய் மூட்டவில்லை.
சங்கீதம் 78 : 39 (ECTA)
அவர்கள் வெறும் சதையே என்பதையும் திரும்பி வராத காற்று என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
சங்கீதம் 78 : 40 (ECTA)
பாலை நிலத்தில் அவர்கள் எத்தனையோமுறை அவருக்கெதிராய்க் கிளர்ந்தெழுந்தனர்! வறண்ட நிலத்தில் அவர் மனத்தை வருத்தினர்!
சங்கீதம் 78 : 41 (ECTA)
இறைவனை அவர்கள் மீண்டும் மீண்டும் சோதித்தனர்; இஸ்ரயேலின் தூயவருக்கு எரிச்சலூட்டினர்.
சங்கீதம் 78 : 42 (ECTA)
அவரது கைவன்மையை மறந்தனர்; எதிரியிடமிருந்து அவர் அவர்களை விடுவித்த நாளையும் மறந்தனர்;
சங்கீதம் 78 : 43 (ECTA)
அந்நாளில் எகிப்தில் அவர் அருஞ்செயல்கள் செய்தார்; சோவான் சமவெளியில் வியத்தகு செயல்கள் புரிந்தார்.
சங்கீதம் 78 : 44 (ECTA)
அவர்களின் ஆறுகளைக் குருதியாக மாற்றினார்; எனவே, தங்கள் ஓடைகளினின்று அவர்களால் நீர் பருக இயலவில்லை. [* விப 7:17- 21 ]
சங்கீதம் 78 : 45 (ECTA)
அவர்களை விழுங்குமாறு அவர்கள்மீது ஈக்களையும், அவர்களது நாட்டை அழிக்குமாறு தவளைகளையும் அவர் அனுப்பினார். [* விப 8:1-6; 22- 24 ]
சங்கீதம் 78 : 46 (ECTA)
அவர்களது விளைச்சலைப் பச்சைப் புழுக்களுக்கும் அவர்களது உழைப்பின் பயனை வெட்டுக்கிளிகளுக்கும் அவர் கொடுத்தார். [* விப 10:12- 15 ]
சங்கீதம் 78 : 47 (ECTA)
கல்மழையினால் அவர்களுடைய திராட்சைக் கொடிகளையும் உறைபனியால் அவர்களுடைய அத்தி மரங்களையும் அவர் அழித்தார். [* விப 9:22- 25 ]
சங்கீதம் 78 : 48 (ECTA)
அவர்களுடைய கால்நடைகளைக் கல்மழையிடமும் அவர்களுடைய ஆடுமாடுகளை இடி மின்னலிடமும் அவர் ஒப்புவித்தார். [* விப 9:22- 25 ]
சங்கீதம் 78 : 49 (ECTA)
தம் சினத்தையும், சீற்றத்தையும் வெஞ்சினத்தையும் இன்னலையும் – அழிவு கொணரும் தூதர்க் கூட்டத்தை – அவர் ஏவினார்.
சங்கீதம் 78 : 50 (ECTA)
அவர் தமது சினத்திற்கு வழியைத் திறந்துவிட்டார்; அவர்களைச் சாவினின்று தப்புவிக்கவில்லை; அவர்களின் உயிரைக் கொள்ளை நோய்க்கு ஒப்புவித்தார்.
சங்கீதம் 78 : 51 (ECTA)
எகிப்தின் அனைத்துத் தலைப்பேறுகளையும் ‛காம்’ கூடாரங்களில் ஆண் தலைப்பேறுகளையும் அவர் சாகடித்தார். [* விப 12: 29 ]
சங்கீதம் 78 : 52 (ECTA)
அவர்தம் மக்களை ஆடுகளென வெளிக்கொணர்ந்தார்; பாலைநிலத்தில் அவர்களுக்கு மந்தையென வழி காட்டினார். [* விப 13:17- 22 ]
சங்கீதம் 78 : 53 (ECTA)
பாதுகாப்புடன் அவர்களை அவர் அழைத்துச் சென்றார்; அவர்கள் அஞ்சவில்லை; அவர்களுடைய எதிரிகளைக் கடல் மூடிக்கொண்டது. [* விப 14:26- 28 ]
சங்கீதம் 78 : 54 (ECTA)
அவர் தமது திருநாட்டுக்கு, தமது வலக்கரத்தால் வென்ற மலைக்கு, அவர்களை அழைத்துச் சென்றார். [* விப 15:17; யோசு 3:14- 17 ]
சங்கீதம் 78 : 55 (ECTA)
அவர்கள் முன்னிலையில் வேற்றினத்தாரை அவர் விரட்டியடித்தார்; அவர்களுக்கு நாட்டைப் பங்கிட்டு உரிமைச் சொத்தாகக் கொடுத்தார்; இஸ்ரயேல் குலங்களை அவர்கள் கூடாரங்களில் குடியேற்றினார். [* யோசு 11:16- 23 ]
சங்கீதம் 78 : 56 (ECTA)
ஆயினும், உன்னதரான கடவுளை அவர்கள் சோதித்தனர்; அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்; அவர்தம் நியமங்களைக் கடைப்பிடிக்கவில்லை. [* நீதி 2:11- 15 ]
சங்கீதம் 78 : 57 (ECTA)
தங்கள் மூதாதையர்போல் அவர்கள் வழி தவறினர்; நம்பிக்கைத் துரோகம் செய்தனர்; கோணிய வில்லெனக் குறி மாறினர்.
சங்கீதம் 78 : 58 (ECTA)
தம் தொழுகை மேடுகளால் அவருக்குச் சினமூட்டினர்; தம் வார்ப்புச் சிலைகளால் அவருக்கு ஆத்திரமூட்டினர்.
சங்கீதம் 78 : 59 (ECTA)
கடவுள் இதைக் கண்டு சினம் கொண்டார்; இஸ்ரயேலை அவர் முழுமையாகப் புறக்கணித்தார்;
சங்கீதம் 78 : 60 (ECTA)
சீலோவில் அழைந்த தம் உறைவிடத்தினின்று வெளியேறினார்; மானிடர் நடுவில் தாம் வாழ்ந்த கூடாரத்தினின்று அகன்றார்; [* யோசு 18:1; எரே 7:12-14; 26: 6 ]
சங்கீதம் 78 : 61 (ECTA)
தம் வலிமையை* அடிமைத் தனத்திற்குக் கையளித்தார்; தம் மாட்சியை* எதிரியிடம் ஒப்புவித்தார்; [* 1 சாமு 4:4- 22 ; * “தம் வலிமையை” மற்றும் “தம் மாட்சியை” என்னும் சொற்கள் உடன்படிக்கைப் பேழையைக் குறிக்கும். . (காண் ]
சங்கீதம் 78 : 62 (ECTA)
தம் மக்களை வாளுக்குக் கையளித்தார்; தம் உரிமைச்சொத்தின்மீது கடுஞ்சினங்கொண்டார்.
சங்கீதம் 78 : 63 (ECTA)
அவர்களுடைய இளைஞரை நெருப்பு விழுங்கியது; அவர்களுடைய கன்னியர்க்குத் திருமணப் பாடல் இல்லாது போயிற்று.
சங்கீதம் 78 : 64 (ECTA)
அவர்களுடைய குருக்கள் வாளால் வீழ்த்தப்பட்டனர்; அவர்களுடைய கைம்பெண்டிர்க்கு ஒப்பாரி வைக்க வழியில்லை.
சங்கீதம் 78 : 65 (ECTA)
அப்பொழுது, உறக்கத்தினின்று எழுவோரைப்போல், திராட்சை மதுவால் களிப்புறும் வீரரைப்போல் எம் தலைவர் விழித்தெழுந்தார்.
சங்கீதம் 78 : 66 (ECTA)
அவர் தம் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தார்; அவர்களை என்றென்றும் இகழ்ச்சிக்கு உள்ளாக்கினார்.
சங்கீதம் 78 : 67 (ECTA)
அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்ராயிம் குலத்தைத் தேர்வு செய்யவில்லை.
சங்கீதம் 78 : 68 (ECTA)
ஆனால், யூதாவின் குலத்தை, தமக்கு விருப்பமான சீயோன் மலையை அவர் தேர்ந்துகொண்டார்.
சங்கீதம் 78 : 69 (ECTA)
தம் திருத்தலத்தை உயர் விண்ணகம்போல் அவர் அமைத்தார்; மண்ணுலகத்தில்* என்றும் நிலைத்திருக்குமாறு எழுப்பினார். [ ‘மண்ணகம் போல்’ என்பது எபிரேய பாடம்.. ]
சங்கீதம் 78 : 70 (ECTA)
அவர் தாவீதைத் தம் ஊழியராய்த் தேர்ந்தெடுத்தார்; ஆட்டு மந்தைகளினின்று அவரைப் பிரித்தெடுத்தார். [* 1 சாமு 16:11-12; 2 சாமு 7:8; 1 குறி 17: 7 ]
சங்கீதம் 78 : 71 (ECTA)
இறைவன் தம் மக்களான யாக்கோபை, தம் உரிமைச் சொத்தான இஸ்ரயேலை, பால் கொடுக்கும் ஆடுகளைப் பேணிய தாவீது மேய்க்குமாறு செய்தார். [* 1 சாமு 16:11-12; 2 சாமு 7:8; 1 குறி 17: 7 ]
சங்கீதம் 78 : 72 (ECTA)
அவரும் நேரிய உள்ளத்தோடு அவர்களைப் பேணினார்; கைவன்மையாலும் அறிவுத் திறனாலும் அவர்களை வழிநடத்தினார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72