சங்கீதம் 77 : 1 (ECTA)
துன்ப நாளில் ஆறுதல்
(பாடகர் தலைவர் எதுத்தூனுக்கு; ஆசாபின் புகழ்ப்பா)
கடவுளை நோக்கி உரத்த குரலில் மன்றாடுகின்றேன்; கடவுள் எனக்குச் செவிசாய்த்தருள வேண்டுமென்று அவரை நோக்கி மன்றாடுகின்றேன்.
சங்கீதம் 77 : 2 (ECTA)
என் துன்ப நாளில் என் தலைவரை நாடினேன்; இரவில் அயராது கைகூப்பினேன்; ஆனாலும் என் ஆன்மா ஆறுதல் அடையவில்லை.
சங்கீதம் 77 : 3 (ECTA)
கடவுளை நினைத்தேன்; பெருமூச்சு விட்டேன்; அவரைப்பற்றி சிந்தித்தேன்; என் மனம் சோர்வுற்றது. (சேலா)
சங்கீதம் 77 : 4 (ECTA)
என் கண் இமைகள் மூடாதபடி செய்துவிட்டீர்; நான் கலக்கமுற்றிருக்கிறேன்; என்னால் பேச இயலவில்லை.
சங்கீதம் 77 : 5 (ECTA)
கடந்த நாள்களை நினைத்துப் பார்க்கின்றேன்; முற்கால ஆண்டுகளைப்பற்றிச் சிந்திக்கின்றேன்.
சங்கீதம் 77 : 6 (ECTA)
இரவில் என் பாடலைப்பற்றி நினைத்துப் பார்த்தேன்; என் இதயத்தில் சிந்தித்தேன்; என் மனம் ஆய்வு செய்தது;
சங்கீதம் 77 : 7 (ECTA)
‘என் தலைவர் என்றென்றும் கைவிட்டுவிடுவாரோ? இனி ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டாரோ?
சங்கீதம் 77 : 8 (ECTA)
அவரது பேரன்பு முற்றிலும் மறைந்துவிடுமோ? அவரது வாக்குறுதி தலைமுறைதோறும் அற்றுப்போய்விடுமோ?
சங்கீதம் 77 : 9 (ECTA)
கடவுள் இரக்கங்காட்ட மறந்துவிட்டாரோ? அல்லது சினங்கொண்டு தமது இரக்கத்தை நிறுத்திவிட்டாரோ?’ (சேலா)
சங்கீதம் 77 : 10 (ECTA)
அப்பொழுது நான், ‘உன்னதரின் வலக்கை மாறுபட்டுச் செயலாற்றுவது என்னை வருத்துகின்றது’ என்றேன்.
சங்கீதம் 77 : 11 (ECTA)
ஆண்டவரே, உம் செயல்களை என் நினைவுக்குக் கொண்டு வருவேன்; முற்காலத்தில் நீர் செய்த வியத்தகு செயல்களை நினைத்துப் பார்ப்பேன்.
சங்கீதம் 77 : 12 (ECTA)
உம் செயல்கள் அனைத்தையும் பற்றித் தியானிப்பேன்! உம் வலிமைமிகு செயல்களைப் பற்றிச் சிந்திப்பேன்.
சங்கீதம் 77 : 13 (ECTA)
கடவுளே, உமது வழி தூய்மையானது! மாபெரும் நம் கடவுளுக்கு நிகரான இறைவன் யார்! [* விப 14: 21 ]
சங்கீதம் 77 : 14 (ECTA)
அரியன செய்யும் இறைவன் நீர் ஒருவரே! மக்களினங்களிடையே உமது ஆற்றலை விளங்கச் செய்தவரும் நீரே; [* யோபு 41:1; திபா 104:26; எசா 27:1.. ]
சங்கீதம் 77 : 15 (ECTA)
யாக்கோபு, யோசேப்பு என்போரின் புதல்வரான உம் மக்களை நீர் உமது புயத்தால் மீட்டுக் கொண்டீர். (சேலா)
சங்கீதம் 77 : 16 (ECTA)
கடவுளே, வெள்ளம் உம்மைப் பார்த்தது; வெள்ளம் உம்மைப் பார்த்து நடுக்கமுற்றது; ஆழ்கடல்களும் கலக்கமுற்றன.
சங்கீதம் 77 : 17 (ECTA)
கார்முகில்கள் மழை பொழிந்தன; மேகங்கள் இடிமுழங்கின; உம் அம்புகள் எத்திக்கும் பறந்தன.
சங்கீதம் 77 : 18 (ECTA)
உமது இடிமுழக்கம் கடும்புயலில் ஒலித்தது; மின்னல்கள் பூவுலகில் ஒலி பாய்ச்சின; மண்ணுலகம் நடுங்கி அதிர்ந்தது.
சங்கீதம் 77 : 19 (ECTA)
கடலுக்குள் உமக்கு வழி அமைத்தீர்; வெள்ளத்திரளிடையே உமக்குப் பாதை ஏற்படுத்தினீர்; ஆயினும் உம் அடிச்சுவடுகள் எவருக்கும் புலப்படவில்லை.
சங்கீதம் 77 : 20 (ECTA)
மோசே, ஆரோன் ஆகியோரைக் கொண்டு உம் மக்களை மந்தையென அழைத்துச் சென்றீர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20