சங்கீதம் 75 : 1 (ECTA)
நீதி வழங்கும் கடவுள்
(பாடகர் தலைவர்க்கு: ‘அழிக்காதே’ என்ற மெட்டு; ஆசாபின் புகழ்ப்பாடல்) உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; கடவுளே, உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; உமது பெயரைப் போற்றுகின்றோம்; உம் வியத்தகு செயல்களை எடுத்துரைக்கின்றோம்.
சங்கீதம் 75 : 2 (ECTA)
நான் தகுந்த வேளையைத் தேர்ந்துகோண்டு, நீதியோடு தீர்ப்பு வழங்குவேன்.
சங்கீதம் 75 : 3 (ECTA)
உலகமும் அதில் வாழ்வோர் அனைவரும் நிலைகுலைந்து போகலாம்; ஆனால், நான் அதன் தூண்களை உறுதியாக நிற்கச் செய்வேன். (சேலா)
சங்கீதம் 75 : 4 (ECTA)
வீண் பெருமை கொள்வோரிடம், ‛வீண் பெருமை கொள்ள வேண்டாம்’
எனவும் பொல்லாரிடம், ‛உங்கள் வலிமையைக் காட்ட வேண்டாம்;
சங்கீதம் 75 : 5 (ECTA)
உங்கள் ஆற்றலைச் சிறிதளவும் காட்டிக்கொள்ள வேண்டாம்; தலையை ஆட்டி இறுமாப்புடன் பேச வேண்டாம்;’ எனவும் சொல்வேன்.
சங்கீதம் 75 : 6 (ECTA)
கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ, பாலைவெளியிலிருந்தோ,
மலைகளிலிருந்தோ, உங்களுக்கு எதுவும் வராது.
சங்கீதம் 75 : 7 (ECTA)
ஆனால், கடவுளிடமிருந்தே தீர்ப்பு வரும்; அவரே ஒருவரைத் தாழ்த்துகின்றார்; இன்னொருவரை உயர்த்துகின்றார்.
சங்கீதம் 75 : 8 (ECTA)
ஏனெனில், மதிமயக்கும் மருந்து கலந்த திராட்சை மது பொங்கிவழியும் ஒரு பாத்திரம் ஆண்டவர் கையில் இருக்கின்றது; அதிலிருந்து அவர் மதுவை ஊற்றுவார்; உலகிலுள்ள பொல்லார் அனைவரும் அதை முற்றிலும் உறிஞ்சிக் குடித்துவிடுவர்.
சங்கீதம் 75 : 9 (ECTA)
நானோ எந்நாளும் மகிழ்ந்திருப்பேன்; யாக்கோபின் கடவுளைப் புகழ்ந்து பாடுவேன்;
சங்கீதம் 75 : 10 (ECTA)
பொல்லாரை அவர் வலிமை இழக்கச் செய்வார்; நேர்மையாளரின் ஆற்றலோ உயர்வுபெறும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10