சங்கீதம் 73 : 1 (ECTA)
மூன்றாம் பகுதிகடவுளின் நீதிமுறை
(ஆசாபின் புகழ்ப்பா) உண்மையாகவே, இஸ்ரயேலர்க்குக் கடவுள் எவ்வளவு நல்லவர்! தூய உள்ளத்தினர்க்கு ஆண்டவர் எவ்வளவோ நல்லவர்!
சங்கீதம் 73 : 2 (ECTA)
என் கால்கள் சற்றே நிலைதடுமாறலாயின; நான் அடிசறுக்கி விழப்போனேன்.
சங்கீதம் 73 : 3 (ECTA)
ஆணவம் கொண்டோர்மேல் நான் பொறாமை கொண்டேன்; பொல்லாரின் வளமிகு வாழ்வை நான் கண்டேன்.
சங்கீதம் 73 : 4 (ECTA)
அவர்களுக்குச் சாவின் வேதனை என்பதே இல்லை; அவர்களது உடல், நலமும் உரமும் கொண்டது.
சங்கீதம் 73 : 5 (ECTA)
மனிதப் பிறவிகளுக்குள்ள வருத்தம் அவர்களுக்கு இல்லை. மற்ற மனிதர்களைப் போல் அவர்கள் துன்புறுவதில்லை.
சங்கீதம் 73 : 6 (ECTA)
எனவே, மணிமாலைபோல் செருக்கு அவர்களை அணி செய்கிறது; வன்செயல் அவர்களை ஆடைபோல மூடிக்கொள்கிறது.
சங்கீதம் 73 : 7 (ECTA)
அவர்களின் கண்கள் கொழுப்பு மிகுதியால் புடைத்திருக்கின்றன; அவர்களது மனத்தின் கற்பனைகள் எல்லை கடந்து செல்கின்றன.
சங்கீதம் 73 : 8 (ECTA)
பிறரை எள்ளி நகையாடி வஞ்சகமாய்ப் பேசுகின்றனர்; இறுமாப்புக்கொண்டு கொடுமை செய்யத் திட்டமிடுகின்றனர். [* செக் 9:10.. ]
சங்கீதம் 73 : 9 (ECTA)
விண்ணுலகை எதிர்த்து அவர்கள் வாய் பேசுகின்றது; மண்ணுலகமெங்கும் அவர்கள் சொல் விரிந்து பரவுகின்றது.
சங்கீதம் 73 : 10 (ECTA)
ஆதலால், கடவுளின் மக்களும் அவர்களைப் புகழ்ந்து பின்பற்றுகின்றனர்; இவ்வாறு, கடல் முழுவதையும் உறிஞ்சிக் குடித்துவிட்டார்கள்.
சங்கீதம் 73 : 11 (ECTA)
‘இறைவனுக்கு எப்படித் தெரியும்? உன்னதர்க்கு அறிவு இருக்கிறதா?’ என்கின்றார்கள்.
சங்கீதம் 73 : 12 (ECTA)
ஆம்; பொல்லார் இப்படித்தான் இருக்கின்றனர்; என்றும் வளமுடன் வாழ்ந்து செல்வத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர்.
சங்கீதம் 73 : 13 (ECTA)
அப்படியானால், நான் என் உள்ளத்தை மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா? குற்றமற்ற நான் என் கைகளைக் கழுவிக்கொண்டதும் வீண்தானா?
சங்கீதம் 73 : 14 (ECTA)
நாள்தோறும் நான் வதைக்கப்படுகின்றேன்; காலைதோறும் கண்டிப்புக்கு ஆளாகின்றேன்.
சங்கீதம் 73 : 15 (ECTA)
“நானும் அவர்களைப்போல் பேசலாமே” என்று நான் நினைத்திருந்தால், உம் மக்களின் தலைமுறைக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவனாவேன்.
சங்கீதம் 73 : 16 (ECTA)
ஆகவே, இதன் உண்மை என்னவென்று கண்டறிய முயன்றேன்; ஆனால், அது பெரிய புதிராயிருந்தது.
சங்கீதம் 73 : 17 (ECTA)
நான் இறைவனின் தூயகத்திற்குச் சென்றபின்புதான் அவர்களுக்கு நேரிடப்போவது என்ன என்பதை உணர்ந்துகொண்டேன்.
சங்கீதம் 73 : 18 (ECTA)
உண்மையில் அவர்களை நீர் சறுக்கலான இடங்களில் வைப்பீர்; அவர்களை விழத்தாட்டி அழிவுக்கு உள்ளாக்குவீர்.
சங்கீதம் 73 : 19 (ECTA)
அவர்கள் எவ்வளவு விரைவில் ஒழிந்து போகிறார்கள்! அவர்கள் திகில் பிடித்தவர்களாய் அடியோடு அழிந்து போகிறார்கள்!
சங்கீதம் 73 : 20 (ECTA)
விழித்தெழுவோரின் கனவுபோல் அவர்கள் ஒழிந்து போவார்கள்; என் தலைவராகிய ஆண்டவரே, நீர் கிளர்ந்தெழும்போது அவர்கள் போலித்தனத்தை இகழ்வீர்.
சங்கீதம் 73 : 21 (ECTA)
என் உள்ளம் கசந்தது; என் உணர்ச்சிகள் என்னை ஊடுருவிக் குத்தின.
சங்கீதம் 73 : 22 (ECTA)
அப்பொழுது நான் அறிவிழந்த மதிகேடனானேன்; உமது முன்னிலையில் ஒரு விலங்கு போல நடந்து கொண்டேன்.
சங்கீதம் 73 : 23 (ECTA)
ஆனாலும், நான் எப்போதும் உமது முன்னிலையிலேதான் இருக்கின்றேன்; என் வலக்கையை ஆதரவாய்ப் பிடித்துள்ளீர்.
சங்கீதம் 73 : 24 (ECTA)
உமது திருவுளப்படியே என்னை நடத்துகின்றீர்; முடிவில் மாட்சியோடு என்னை எடுத்துக் கொள்வீர்.
சங்கீதம் 73 : 25 (ECTA)
விண்ணுலகில் உம்மையன்றி எனக்கிருப்பவர் யார்? மண்ணுலகில் வேறு விருப்பம் உம்மையன்றி எனக்கேதுமில்லை.
சங்கீதம் 73 : 26 (ECTA)
எனது உடலும் உள்ளமும் நைந்து போயின; கடவுளே என் உள்ளத்திற்கு அரணும் என்றென்றும் எனக்குரிய பங்கும் ஆவார்.
சங்கீதம் 73 : 27 (ECTA)
உண்மையிலேயே, உமக்குத் தொலைவாய் இருப்பவர்கள் அழிவார்கள்; உம்மைக் கைவிடும் அனைவரையும் அழித்துவிடும்.
சங்கீதம் 73 : 28 (ECTA)
நானோ கடவுளின் அண்மையே எனக்கு நலமெனக் கொள்வேன்; என் தலைவராகிய ஆண்டவரை என் அடைக்கலமாய்க்கொண்டு அவர்தம் செயல்களை எடுத்துரைப்பேன்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28