சங்கீதம் 70 : 1 (ECTA)
உதவிக்காக வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: நினைவு கூர்தலுக்காகத் தாவீது பாடியது)
(திபா 40:13-17)
கடவுளே! என்னை விடுவித்தருளும்; ஆண்டவரே! எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்!
சங்கீதம் 70 : 2 (ECTA)
என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் அனைவரும் வெட்கமும் குழப்பமும் அடைவராக! எனக்குத் தீங்கு வருவதை விரும்புவோர் வெட்கத்தால் தலைகுனிந்து பின்னிட்டுத் திரும்புவராக!
சங்கீதம் 70 : 3 (ECTA)
என்னைப் பார்த்து, ‛ஆ! ஆ!’ என்று ஏளனம் செய்வோர் பெருங்கலக்கமுற்றுப் பின்னிடுவராக!
சங்கீதம் 70 : 4 (ECTA)
உம்மை நாடித் தேடும் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூர்வராக! நீர் அருளும் மீட்பில் நாட்டம் கொள்வோர் ‛கடவுள் மாட்சி மிக்கவர்’ என்று எப்போதும் சொல்வர். [* திபா 35:19; யோவா 15: 25 ]
சங்கீதம் 70 : 5 (ECTA)
நான் சிறுமையுற்றவன், ஏழை; கடவுளே! என்னிடம் விரைந்து வாரும்; நீரே எனக்குத் துணை; என்னை விடுவிப்பவர்; என் கடவுளே! காலந்தாழ்த்தாதேயும்.

1 2 3 4 5