சங்கீதம் 6 : 1 (ECTA)
இக்கட்டுக் காலத்தில் உதவுமாறு வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; எட்டாம் கட்டையில்; தாவீதின் புகழ்ப்பா) ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்; என் மீது கடுஞ்சீற்றங்கொண்டு என்னைத் தண்டியாதேயும். [* திபா 38:1.. ]
சங்கீதம் 6 : 2 (ECTA)
ஆண்டவரே, எனக்கு இரங்கும்; ஏனெனில், நான் தளர்ந்து போனேன்; ஆண்டவரே, என்னைக் குணமாக்கியருளும்; ஏனெனில், என் எலும்புகள்
வலுவிழந்து போயின.
சங்கீதம் 6 : 3 (ECTA)
என் உயிர் ஊசலாடுகின்றது; ஆண்டவரே, இந்நிலை எத்தனை நாள்?
சங்கீதம் 6 : 4 (ECTA)
ஆண்டவரே, திரும்பும்; என் உயிரைக் காப்பாற்றும். உமது பேரன்பை முன்னிட்டு என்னை மீட்டருளும்.
சங்கீதம் 6 : 5 (ECTA)
இறந்தபின் உம்மை நினைப்பவர் எவருமில்லை; பாதாளத்தில் உம்மைப் போற்றுபவர் யார்?
சங்கீதம் 6 : 6 (ECTA)
பெருமூச்சினால் இளைத்துப் போனேன்; ஒவ்வோர் இரவும் கண்ணீரில் என் படுக்கை மிதக்கின்றது. என் கட்டில் அழுகையால் நனைகின்றது.
சங்கீதம் 6 : 7 (ECTA)
துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று; என் பகைவர் அனைவரின் காரணமாக அது மங்கிப்போயிற்று.
சங்கீதம் 6 : 8 (ECTA)
தீங்கிழைப்போரே! நீங்கள் அனைவரும் என்னை விட்டு அகன்றுபோங்கள்; ஏனெனில், ஆண்டவர் என் அழுகுரலுக்குச் செவிசாய்த்து விட்டார்.
சங்கீதம் 6 : 9 (ECTA)
ஆண்டவர் என் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்; அவர் என் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார்.
சங்கீதம் 6 : 10 (ECTA)
என் எதிரிகள் யாவரும் வெட்கிப் பெரிதும் கலங்கட்டும்; அவர்கள் திடீரென நாணமுற்றுத் திரும்பிச் செல்லட்டும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10