{உதவிக்காக வேண்டல்[BR](பாடகர் தலைவர்க்கு: ‘அழிக்காதே’ என்ற மெட்டு; சவுலுக்குத் தப்பியோடிக் குகையில் ஒளிந்து கொண்டிருந்தபொழுது, தாவீது பாடிய கழுவாய்ப்பாடல்)} [PS] [QS][SS] கடவுளே! எனக்கு இரங்கும்,[SE][SS] எனக்கு இரங்கும்;[SE][SS] நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்;[SE][SS] இடர் நீங்கும்வரை[SE][SS] உம் இறக்கைகளின் நிழலையே[SE][SS] எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன்.[SE][QE]
சங்கீதம் 57 : 2 (ECTA)
[QS][SS] உன்னதரான கடவுளை நோக்கி,[SE][SS] எனக்காக யாவையும் செய்து முடிக்கும்[SE][SS] இறைவனை நோக்கியே[SE][SS] நான் மன்றாடுகின்றேன். [* 56 தலைப்பு: 1 சாமு ; 24:3.[QE] ] [SE][QE]
சங்கீதம் 57 : 3 (ECTA)
[QS][SS] வானகத்தினின்று அவர்[SE][SS] எனக்கு உதவி அனுப்பி[SE][SS] என்னைக் காத்தருள்வார்;[SE][SS] என்னை நசுக்குவோரை[SE][SS] இழிவுப்படுத்துவார். (சேலா)[SE][SS] கடவுள் தம் பேரன்பையும்[SE][SS] வாக்குப் பிறழாமையையும்[SE][SS] வெளிப்படுத்துவார்.[SE][QE]
சங்கீதம் 57 : 4 (ECTA)
[QS][SS] மனிதரை வெறியோடு விழுங்கும்[SE][SS] சிங்கங்கள் போன்றவரிடையே[SE][SS] நான் கிடக்கின்றேன்;[SE][SS] அவர்களின் பற்கள்[SE][SS] ஈட்டியும் அம்பும் போன்றவை;[SE][SS] அவர்களின் நா[SE][SS] கூர்மையான வாள் போன்றது.[SE][QE]
சங்கீதம் 57 : 5 (ECTA)
[QS][SS] கடவுளே! வானங்களுக்கு மேலாக[SE][SS] நீர் உயர்த்தப்பெறுவீராக![SE][SS] பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக![SE][QE]
சங்கீதம் 57 : 6 (ECTA)
[QS][SS] நான் நடக்கும் வழியில்[SE][SS] எனக்குக் கண்ணி வைக்கின்றனர்;[SE][SS] நான் மனம் ஒடிந்து போனேன்;[SE][SS] என் பாதையில் குழி வெட்டினர்;[SE][SS] அவர்களே அதில் விழுந்தனர். (சேலா)[SE][QE]
சங்கீதம் 57 : 7 (ECTA)
[QS][SS] என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது;[SE][SS] கடவுளே! என் உள்ளம்[SE][SS] உறுதியாயிருக்கின்றது;[SE][SS] நான் பாடுவேன்;[SE][SS] உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.[SE][QE]
[QS][SS] என் தலைவரே![SE][SS] மக்களினங்களிடையே[SE][SS] உமக்கு நன்றி செலுத்துவேன்;[SE][SS] எல்லா இனத்தாரிடையேயும்[SE][SS] உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.[SE][QE]