சங்கீதம் 53 : 1 (ECTA)
இறைப்பற்று இல்லார்
(பாடகர் தலைவர்க்கு: ‘நோயுற்று’ என்ற மெட்டு; தாவீதின் அறப்பாடல்)
(திபா 14) ‛கடவுள் இல்லை’ என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்; அவர்களுள் சிலர் கெட்டு அருவருப்பான செயல்களில்
ஈடுபடுகின்றனர்; நல்லது செய்வார் யாரும் இல்லை. [* உரோ 3:10-12.. ]
சங்கீதம் 53 : 2 (ECTA)
கடவுள் விண்ணகத்தினின்று மானிடரை உற்றுநோக்குகின்றார்; மதிநுட்பமுள்ளவர், கடவுளை நாடுபவர் எவராவது உண்டோ என்று பார்க்கின்றார். [* உரோ 3:10-12.. ]
சங்கீதம் 53 : 3 (ECTA)
எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்; ஒருமிக்கக் கெட்டு போயினர்; நல்லது செய்வார் யாரும் இல்லை; ஒருவர் கூட இல்லை. [* உரோ 3:10-12.. ]
சங்கீதம் 53 : 4 (ECTA)
‛தீங்கிழைக்கும் யாவரும் அறிவை இழந்துவிட்டார்களோ? உணவை விழுங்குவதுபோல் என் மக்களை விழுங்கப் பார்க்கின்றார்களே!’
இவர்கள் கடவுளை நோக்கி மன்றாடுவதுமில்லை;
சங்கீதம் 53 : 5 (ECTA)
எனவே, அவர்கள் இதுவரை கண்டிராத முறையில் பேரச்சத்தால் நடுநடுங்குவர்; இறைமக்களை ஒடுக்கியோரின் எலும்புகளைக் கடவுள் சிதறடிப்பார்; கடவுள் அவர்களைக் கைவிட்டதால் அவர்கள் மானக்கேடு அடைவர்.
சங்கீதம் 53 : 6 (ECTA)
சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக! கடவுள் தம் மக்களுக்கு மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக! இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!
❮
❯
1
2
3
4
5
6