சங்கீதம் 52 : 1 (ECTA)
இறைவனின் தீர்ப்பும் திருவருளும்
(பாடகர் தலைவர்க்கு: அகிமெலக்கின் வீட்டுக்குத் தாவீது போனாரென்று ஏதோமியன் தோயேகு சவுலுக்கு அறிவித்த போது தாவீது பாடிய அறப்பாடல்)
வலியோனே! தீமை செய்வதில் ஏன் பெருமை கொள்கின்றாய்? இறைவனின் பேரன்பு எந்நாளும் உள்ளது.
சங்கீதம் 52 : 2 (ECTA)
கேடுவிளைவிக்க நீ திட்டமிடுகின்றாய்; உனது நா தீட்டிய கத்தி போன்றது; வஞ்சகத்தில் தேர்ந்தோன் நீ அன்றோ! [* 52 தலைப்பு: 1 சாமு .. ]
சங்கீதம் 52 : 3 (ECTA)
நன்மை செய்வதைவிட தீமை செய்வதையே விரும்புகின்றாய்; உண்மை பேசுவதைவிட பொய் பேசுவதையே விரும்புகின்றாய். (சேலா) [* 52 தலைப்பு: 1 சாமு .. ]
சங்கீதம் 52 : 4 (ECTA)
நரம்பில்லா நாவுடையோனே! நீ விரும்பும் சொற்கள் அனைத்தும் கேடு விளைவிப்பனவே! [* 52 தலைப்பு: 1 சாமு .. ]
சங்கீதம் 52 : 5 (ECTA)
ஆகவே! கடவுள் உன்னை என்றும் மீளாதபடி நொறுக்கிவிடுவார்; உன்னைத் தூக்கி எறிவார்; கூடாரத்தினின்று உன்னைப் பிடுங்கி எறிவார்; உயிர் வாழ்வோரின் உலகினின்று உன்னை வேரோடு களைந்து விடுவார். (சேலா) [* 52 தலைப்பு: 1 சாமு .. ]
சங்கீதம் 52 : 6 (ECTA)
நேர்மையாளர் அதன் கடுமையைக் கண்டு திகிலடைவர்; மேலும், உன்னை எள்ளி நகையாடிக் கூறுவர்; [* 52 தலைப்பு: 1 சாமு .. ]
சங்கீதம் 52 : 7 (ECTA)
‛இதோ! பாருங்கள்; இவன் தான் கடவுளைத் தன் புகலிடமாய்க் கொள்ளாதவன்;
தன் செல்வப் பெருக்கில்
நம்பிக்கை வைத்தவன்; அழிவுச் செயலையே புகலிடமாய்க் கொண்டவன்!’ [* 52 தலைப்பு: 1 சாமு .. ]
சங்கீதம் 52 : 8 (ECTA)
நானோ, கடவுளின் இல்லத்தில் பச்சை ஒலிவமரக்கன்றுபோல் இருக்கின்றேன்; கடவுளின் பேரன்பில் எப்போதும் நிலையாக நம்பிக்கை வைத்திருக்கின்றேன். [* 52 தலைப்பு: 1 சாமு .. ]
சங்கீதம் 52 : 9 (ECTA)
கடவுளே! நீர் இவ்வாறு எனக்குச் செய்துள்ளதால், உமக்கு என்றென்றும் நன்றி கூறுவேன்; உம் அன்பரின் முன்னிலையில், உம் பெயர்மீது நம்பிக்கை கொள்வேன்; இதுவே நன்று. [* 52 தலைப்பு: 1 சாமு .. ]

1 2 3 4 5 6 7 8 9