சங்கீதம் 47 : 1 (ECTA)
ஆண்டவரே உலகின் அரசர்
(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் புகழ்ப்பா) மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
சங்கீதம் 47 : 2 (ECTA)
ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே;
சங்கீதம் 47 : 3 (ECTA)
வேற்று மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்; அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார்.
சங்கீதம் 47 : 4 (ECTA)
நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்; அது அவர் அன்புகூரும் யாக்கோபின் பெருமை ஆகும். (சேலா)
சங்கீதம் 47 : 5 (ECTA)
ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
சங்கீதம் 47 : 6 (ECTA)
பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். [* எபி 1:8-9.. ]
சங்கீதம் 47 : 7 (ECTA)
ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். [* எபி 1:8-9.. ]
சங்கீதம் 47 : 8 (ECTA)
கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார்.
சங்கீதம் 47 : 9 (ECTA)
மக்களினங்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்; ஏனெனில், மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்; கடவுளே அனைத்திற்கும் மேலானவர்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9