சங்கீதம் 46 : 1 (ECTA)
நம்மோடு வாழும் கடவுள்
(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் பாடல்; ‘இளமகளிர்’ என்ற மெட்டு) கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே.
சங்கீதம் 46 : 2 (ECTA)
ஆகையால், நிலவுலகம் நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும்,
சங்கீதம் 46 : 3 (ECTA)
கடலின் அலைகள் கொந்தளித்துப் பொங்கினாலும், அவற்றின் பெருக்கால் குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. (சேலா)
சங்கீதம் 46 : 4 (ECTA)
ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.
சங்கீதம் 46 : 5 (ECTA)
அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு.
சங்கீதம் 46 : 6 (ECTA)
வேற்றினத்தார் கலக்கமுற்றனர்; அரசுகள் ஆட்டம் கண்டன; கடவுளின் குரல் முழங்கிற்று; பூவுலகம் கரைந்தது. [* எபி 1:8-9.. ]
சங்கீதம் 46 : 7 (ECTA)
படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். (சேலா) [* எபி 1:8-9.. ]
சங்கீதம் 46 : 8 (ECTA)
வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்!
சங்கீதம் 46 : 9 (ECTA)
உலகின் கடையெல்லைவரை போர்களைத் தடுத்து நிறுத்துகின்றார்; வில்லை ஒடிக்கின்றார்; ஈட்டியை முறிக்கின்றார். தேர்களைத் தீக்கு இரையாக்குகின்றார்.
சங்கீதம் 46 : 10 (ECTA)
அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள்; வேற்றினத்தாரிடையே நான் உயர்ந்திருப்பேன்; பூவுலகில் நானே மாட்சியுடன் விளங்குவேன்.
சங்கீதம் 46 : 11 (ECTA)
படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். (சேலா)
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11