சங்கீதம் 44 : 1 (ECTA)
பாதுகாப்புக்காக வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் அறப்பாடல்) கடவுளே, எங்கள் காதுகளால் நாங்களே கேட்டிருக்கின்றோம்; எங்கள் மூதாதையர் அவர்கள் காலத்திலும் அதற்கு முன்பும் நீர் என்னென்ன செய்துள்ளீர் என்று எங்களுக்கு எடுத்துரைத்தனர்.
சங்கீதம் 44 : 2 (ECTA)
உமது கையால் வேற்றினத்தாரை விரட்டியடித்து, எந்தையரை நிலைநாட்டினீர்; மக்களினங்களை நொறுக்கிவிட்டு எந்தையரைச் செழிக்கச் செய்தீர்.
சங்கீதம் 44 : 3 (ECTA)
அவர்கள் தங்கள் வாளால் நாட்டை உடைமையாக்கிக் கொள்ளவில்லை; அவர்கள் தங்கள் புயத்தால் வெற்றி பெறவில்லை. நீர் அவர்களில் மகிழ்ச்சியுற்றதால் உமது வலக்கையும் உமது புயமும் உமது முகத்தின் ஒளியுமே அவர்களுக்கு வெற்றியளித்தன.
சங்கீதம் 44 : 4 (ECTA)
நீரே என் அரசர்; நீரே என் கடவுள்! யாக்கோபுக்கு வெற்றி அளிப்பவர் நீரே.
சங்கீதம் 44 : 5 (ECTA)
எங்கள் பகைவர்களை உமது துணையால் தாக்கி வீழ்த்துவோம்; எங்களுக்கு எதிராய் எழுந்தோரை உமது பெயரால் மிதித்துப் போடுவோம்.
சங்கீதம் 44 : 6 (ECTA)
என் வில்லை நான் நம்புவதில்லை; என் வாள் என்னைக் காப்பாற்றுவதுமில்லை.
சங்கீதம் 44 : 7 (ECTA)
நீரே பகைவரிடமிருந்து எங்களைக் காப்பாற்றினீர்; எங்களை வெறுப்போரை வெட்கமுறச் செய்தீர்.
சங்கீதம் 44 : 8 (ECTA)
எந்நாளும் கடவுளாம் உம்மை நினைத்துப் பெருமை கொண்டோம். என்றென்றும் உமது பெயருக்கு நன்றி செலுத்தி வந்தோம். (சேலா)
சங்கீதம் 44 : 9 (ECTA)
ஆயினும், இப்போது நீர் எங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்; இழிவுபடுத்திவிட்டீர். எங்கள் படைகளுடன் நீர் செல்லாதிருக்கின்றீர்.
சங்கீதம் 44 : 10 (ECTA)
எங்கள் பகைவருக்கு நாங்கள் புறங்காட்டி ஓடும்படிச் செய்தீர். எங்களைப் பகைப்போர் எங்களைக் கொள்ளையிட்டனர்.
சங்கீதம் 44 : 11 (ECTA)
உணவுக்காக வெட்டப்படும் ஆடுகளைப்போல் எங்களை ஆக்கிவிட்டீர். வேற்றினத்தாரிடையே எங்களைச்
சிதறியோடச் செய்தீர்.
சங்கீதம் 44 : 12 (ECTA)
நீர் உம் மக்களை அற்ப விலைக்கு விற்றுவிட்டீர்; அவர்கள் மதிப்பை மிகவும் குறைத்துவிட்டீர்.
சங்கீதம் 44 : 13 (ECTA)
எங்களை அடுத்து வாழ்வோரின் பழிப்புக்கு எங்களை ஆளாக்கினீர்; எங்கள் சுற்றுப்புறத்தாரின் ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்கும் எங்களை உள்ளாக்கினீர்.
சங்கீதம் 44 : 14 (ECTA)
வேற்றினத்தாரிடையே எங்களை ஒரு பழிச்சொல்லாக்கினீர்; ஏனைய மக்கள் எங்களைப் பார்த்துத் தலையசைத்து நகைக்கின்றனர்.
சங்கீதம் 44 : 15 (ECTA)
எனக்குள்ள மானக்கேடு நாள் முழுதும் என் கண்முன் நிற்கின்றது; அவமானம் என் முகத்தை மூடியுள்ளது.
சங்கீதம் 44 : 16 (ECTA)
என்னைப் பழித்துத் தூற்றுவோரின் குரலை நான் கேட்கும்போதும், என் எதிரிகளையும், என்னைப் பழிவாங்கத் தேடுவோரையும் நான் பார்க்கும்போதும் வெட்கிப்போகின்றேன்.
சங்கீதம் 44 : 17 (ECTA)
நாங்கள் உம்மை மறக்காவிடினும், உமது உடன்படிக்கையை மீறாவிடினும், இவையெல்லாம் எங்களுக்கு நேரிட்டன.
சங்கீதம் 44 : 18 (ECTA)
எங்கள் உள்ளம் பின்வாங்கவில்லை; எங்கள் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை.
சங்கீதம் 44 : 19 (ECTA)
ஆயினும், நீர் எங்களை கொடிய பாம்புகள் உள்ள இடத்தில்
நொறுங்கும்படி விட்டுவிட்டீர்; சாவின் இருள் எங்களைக் கவ்விக்கொண்டது.
சங்கீதம் 44 : 20 (ECTA)
நாங்கள் எங்கள் கடவுளின் பெயரை மறந்துவிட்டு, வேற்றுத் தெய்வத்தைக் கைகூப்பி வணங்கியிருந்தோமானால்,
சங்கீதம் 44 : 21 (ECTA)
கடவுளாம் நீர் அதைக் கண்டுபிடித்திருப்பீர் அல்லவா? ஏனெனில், உள்ளத்தில் புதைந்திருப்பவற்றை நீர் அறிகின்றீர்.
சங்கீதம் 44 : 22 (ECTA)
உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகின்றோம்; வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளெனக் கருதப்படுகின்றோம். [* உரோ 8:36.. ]
சங்கீதம் 44 : 23 (ECTA)
என் தலைவா! கிளர்ந்தெழும், ஏன் உறங்குகின்றீர்? விழித்தெழும்; எங்களை ஒருபோதும் ஒதுக்கித் தள்ளிவிடாதேயும்.
சங்கீதம் 44 : 24 (ECTA)
நீர் உமது முகத்தை ஏன் மறைத்துக் கொள்கின்றீர்? எங்கள் சிறுமையையும் துன்பத்தையும் ஏன் மறந்து விடுகின்றீர்?
சங்கீதம் 44 : 25 (ECTA)
நாங்கள் தரைமட்டும் தாழ்ந்துவிட்டோம்; எங்கள் உடல் மண்ணோடு ஒட்டிக்கொண்டுள்ளது.
சங்கீதம் 44 : 26 (ECTA)
எழுந்து வாரும்; எங்களுக்குத் துணை புரியும்; உமது பேரன்பை முன்னிட்டு எங்களை மீட்டருளும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26