சங்கீதம் 37 : 1 (ECTA)
பொல்லார், நல்லார் முடிவுகள்
(தாவீதுக்கு உரியது) தீமை செய்வோரைக் கண்டு மனம் புழுங்காதே; பொல்லாங்கு செய்வோரைக் கண்டு பொறாமைப்படாதே;
சங்கீதம் 37 : 2 (ECTA)
ஏனெனில், அவர்கள் புல்லைப் போல் விரைவில் உலர்ந்து போவர்; பசும் பூண்டைப்போல் வாடிப்போவர்.
சங்கீதம் 37 : 3 (ECTA)
ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ்.
சங்கீதம் 37 : 4 (ECTA)
ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்.
சங்கீதம் 37 : 5 (ECTA)
உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.
சங்கீதம் 37 : 6 (ECTA)
உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார்.
சங்கீதம் 37 : 7 (ECTA)
ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு; தம் வழியில் வெற்றி காண்போரையும் சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே.
சங்கீதம் 37 : 8 (ECTA)
வெஞ்சினம் கொள்ளாதே; வெகுண்டெழுவதை விட்டுவிடு; எரிச்சலடையாதே; அதனால் தீமைதான் விளையும்.
சங்கீதம் 37 : 9 (ECTA)
தீமை செய்வோர் வேரறுக்கப்படுவர்; ஆண்டவருக்காகக் காத்திருப்போரே நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்.
சங்கீதம் 37 : 10 (ECTA)
இன்னும் சிறிதுகாலம்தான்; பிறகு பொல்லார் இரார்; அவர்கள் இருந்த இடத்தில் நீ அவர்களைத் தேடினால் அவர்கள் அங்கே இரார்.
சங்கீதம் 37 : 11 (ECTA)
எளியோர் நிலத்தை உடைமையாகப் பெறுவர்; அவர்கள் வளமிகு வாழ்க்கையில் இன்பம் காண்பர். [* மத் 5:5.. ]
சங்கீதம் 37 : 12 (ECTA)
பொல்லார் நேர்மையாளருக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர்; அவர்களைப் பார்த்துப் பல்லை நெரிக்கின்றனர்.
சங்கீதம் 37 : 13 (ECTA)
என் தலைவர் அவர்களைப் பார்த்து எள்ளி நகைக்கின்றார்; அவர்களது முடிவுகாலம் நெருங்குவதை அவர் காண்கின்றார்.
சங்கீதம் 37 : 14 (ECTA)
எளியோரையும் வறியோரையும் வீழ்த்தவும், நேர்மையான வழியில் நடப்போரைக் கொல்லவும் பொல்லார் வாளை உருவுகின்றனர்; வில்லை நாணேற்றுகின்றனர்.
சங்கீதம் 37 : 15 (ECTA)
ஆனால், அவர்கள் வாள் அவர்கள் நெஞ்சிலேயே பாயும்; அவர்கள் வில்லும் முறிக்கப்படும்.
சங்கீதம் 37 : 16 (ECTA)
பொல்லாரின் திரளான செல்வத்தைவிட நல்லாரின் சிறிதளவு பொருளே சிறந்தது.
சங்கீதம் 37 : 17 (ECTA)
பொல்லாரின் தோள்வலிமை முறிக்கப்படும்; ஆனால் நேர்மையாளரை ஆண்டவர் தாங்கிடுவார்.
சங்கீதம் 37 : 18 (ECTA)
சான்றோரின் வாழ்நாள்களை ஆண்டவர் அறிவார்; அவர்கள் உரிமைச் சொத்து என்றும் நிலைத்திருக்கும்.
சங்கீதம் 37 : 19 (ECTA)
கேடுகாலத்தில் அவர்கள் இகழ்ச்சி அடைவதில்லை; பஞ்ச காலத்திலும் அவர்கள் நிறைவடைவார்கள்.
சங்கீதம் 37 : 20 (ECTA)
ஆனால், பொல்லார் அழிவுக்கு ஆளாவர்; ஆண்டவரின் எதிரிகள் கொழுத்த பலியாடுகளுக்கு ஒப்பாவர். அவர்கள் எரியுண்டு புகையென மறைவர்.
சங்கீதம் 37 : 21 (ECTA)
பொல்லார் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க மாட்டார்; நேர்மையாளரோ மனமிரங்கிப் பிறருக்குக் கொடுப்பர்.
சங்கீதம் 37 : 22 (ECTA)
இறைவனின் ஆசி பெற்றோர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்; அவரால் சபிக்கப்பட்டோர் வேரறுக்கப்படுவர்.
சங்கீதம் 37 : 23 (ECTA)
தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின் காலடிகளை ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார்.
சங்கீதம் 37 : 24 (ECTA)
அவர்கள் விழுந்தாலும் வீழ்ந்து கிடக்கமாட்டார்கள்; ஆண்டவர் அவர்களைத் தம் கையால் தூக்கி நிறுத்துவார்.
சங்கீதம் 37 : 25 (ECTA)
இளைஞனாய் இருந்திருக்கிறேன்; இதோ! முதியவன் ஆகிவிட்டேன்; ஆனால், நேர்மையாளர் கைவிடப்பட்டதை நான் கண்டதில்லை; அவர்களுடைய மரபினர் பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை.
சங்கீதம் 37 : 26 (ECTA)
நேர்மையாளர் எப்போதும் மனமிரங்கிக் கடன் கொடுப்பர்; அவர்களின் மரபினர் இறையாசி பெற்றவராய் இருப்பர்.
சங்கீதம் 37 : 27 (ECTA)
தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்.
சங்கீதம் 37 : 28 (ECTA)
ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்; தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை; அவர்களை என்றும் பாதுகாப்பார். பொல்லாரின் மரபினரோ வேரறுக்கப்படுவர்.
சங்கீதம் 37 : 29 (ECTA)
நேர்மையாளர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்; அதிலேயே என்றென்றும் குடியிருப்பர்.
சங்கீதம் 37 : 30 (ECTA)
நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்; அவர்கள் நா நீதிநெறியை எடுத்துரைக்கும்.
சங்கீதம் 37 : 31 (ECTA)
கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது; அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை.
சங்கீதம் 37 : 32 (ECTA)
பொல்லார் நேர்மையாளரை வேவு பார்த்துக் கொண்டிருப்பர்; அவர்களைக் கொன்றுவிட வழிதேடுவர்.
சங்கீதம் 37 : 33 (ECTA)
ஆனால், ஆண்டவர் நேர்மையாளரை அவர்களின் கையில் ஒப்புவிக்கமாட்டார்; நீதி விசாரணையின்போது அவர்களைத் தண்டனைத்தீர்ப்புக்கு உள்ளாக்கமாட்டார்.
சங்கீதம் 37 : 34 (ECTA)
ஆண்டவருக்காகக் காத்திரு; அவர்தம் வழியைப் பின்பற்று; அப்பொழுது நீ நிலத்தை உடைமையாக்கிக்கொள்ளும்படி அவர் உன்னை உயர்த்துவார். பொல்லார் வேரறுக்கப்படுவதை நீ காண்பாய்.
சங்கீதம் 37 : 35 (ECTA)
வளமான நிலத்தில் தழைத்தோங்கும் மரம்போல் கொடிய நெஞ்சங்கொண்ட பொல்லார் செழித்திருக்கக் கண்டேன்.
சங்கீதம் 37 : 36 (ECTA)
ஆனால், அவர்கள் மறைந்துவிட்டார்கள்; அந்தோ! அவர்கள் அங்கில்லை; தேடிப் பார்த்தேன்; அவர்களைக் காணவில்லை.
சங்கீதம் 37 : 37 (ECTA)
சான்றோரைப் பார்; நேர்மையானவரைக் கவனி; அமைதியையே நாடும் அம்மனிதருக்கு வழிமரபினர் இருப்பர்.
சங்கீதம் 37 : 38 (ECTA)
அநீதியாளர் அனைவரும் ஒன்றாக அழிக்கப்படுவர்; பொல்லாரின் வழிமரபினர் வேரறுக்கப்படுவர்.
சங்கீதம் 37 : 39 (ECTA)
நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது; நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே.
சங்கீதம் 37 : 40 (ECTA)
ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40