சங்கீதம் 33 : 1 (ECTA)
புகழ்ச்சிப் பாடல் நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. [* உரோ 4:7-8.. ]
சங்கீதம் 33 : 2 (ECTA)
யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்; [* உரோ 4:7-8.. ]
சங்கீதம் 33 : 3 (ECTA)
புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள்.
சங்கீதம் 33 : 4 (ECTA)
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.
சங்கீதம் 33 : 5 (ECTA)
அவர் நீதியையும் நேர்மையையும்
விரும்புகின்றார்;
அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.
சங்கீதம் 33 : 6 (ECTA)
ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின; அவரது சொல்லின் ஆற்றலால் வான்கோள்கள் எல்லாம் உருவாயின.
சங்கீதம் 33 : 7 (ECTA)
அவர் கடல்நீரைக் குவியல்போல் சேர்த்து வைத்தார்; அந்நீரை ஆழ் நிலவறைகளில் சேமித்து வைத்தார்.
சங்கீதம் 33 : 8 (ECTA)
அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக! உலகில் வாழ்வோர் அனைவரும் அவருக்கு அஞ்சி நடுங்குவராக!
சங்கீதம் 33 : 9 (ECTA)
அவர் சொல்லி உலகம் உண்டானது; அவர் கட்டளையிட, அது நிலைபெற்றது.
சங்கீதம் 33 : 10 (ECTA)
வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்து விடுகின்றார்.
சங்கீதம் 33 : 11 (ECTA)
ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.
சங்கீதம் 33 : 12 (ECTA)
ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
சங்கீதம் 33 : 13 (ECTA)
வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார்.
சங்கீதம் 33 : 14 (ECTA)
தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக்
கூர்ந்து நோக்குகின்றார்.
சங்கீதம் 33 : 15 (ECTA)
அவர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் அவரே! அவர்களின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே!
சங்கீதம் 33 : 16 (ECTA)
தன் படைப் பெருக்கத்தால் வெற்றிபெறும் அரசருமில்லை; தன் வலிமையின் மிகுதியால் உயிர் தப்பிய வீரருமில்லை.
சங்கீதம் 33 : 17 (ECTA)
வெற்றி பெறப் போர்க்குதிரையை நம்புவது வீண்; மிகுந்த வலுவுள்ளதாயினும் அது விடுவிக்காது.
சங்கீதம் 33 : 18 (ECTA)
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
சங்கீதம் 33 : 19 (ECTA)
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்;
அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.
சங்கீதம் 33 : 20 (ECTA)
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும்
கேடயமும் ஆவார்.
சங்கீதம் 33 : 21 (ECTA)
நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.
சங்கீதம் 33 : 22 (ECTA)
உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22