சங்கீதம் 29 : 1 (ECTA)
புயல் நடுவே ஆண்டவரின் குரல்
(தாவீதின் புகழ்ப்பா)
இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். ஆம்! ஆண்டவருக்கே
உரித்தாக்குங்கள்! [* திபா 96:7- 9 ]
சங்கீதம் 29 : 2 (ECTA)
ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்; தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். [* திபா 96:7- 9 ]
சங்கீதம் 29 : 3 (ECTA)
ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது; மாட்சிமிகு இறைவன் முழங்குகின்றார்; ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல்
வீற்றிருக்கின்றார்.
சங்கீதம் 29 : 4 (ECTA)
ஆண்டவரின் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது.
சங்கீதம் 29 : 5 (ECTA)
ஆண்டவரின் குரல் கேதுரு மரங்களை முறிக்கின்றது; ஆண்டவர் லெபனோன் கேதுரு மரங்களை முறித்துவிடுகின்றார்.
சங்கீதம் 29 : 6 (ECTA)
லெபனோனின் மலையைக் கன்றுக் குட்டியெனத் துள்ளச் செய்கின்றார்; சிரியோன் மலையைக் காட்டெருமைக் கன்றெனக் குதிக்கச் செய்கின்றார்.
சங்கீதம் 29 : 7 (ECTA)
ஆண்டவரின் குரல் மின்னலைத் தெறிக்கச் செய்கின்றது;
சங்கீதம் 29 : 8 (ECTA)
ஆண்டவரின் குரல் பாலைவனத்தை அதிரச் செய்கின்றது; ஆண்டவர் காதேசு பாலைவனத்தை நடுங்கச் செய்கின்றார்.
சங்கீதம் 29 : 9 (ECTA)
ஆண்டவரின் குரல் கருவாலி மரங்களை முறித்து விடுகின்றது*; காடுகளை வெறுமை ஆக்குகின்றது; அவரது கோவிலில் உள்ள அனைவரும் ‛இறைவனுக்கு மாட்சி’ என்று ஆர்ப்பரிக்கின்றனர். [ ‘மானைக் கன்று ஈனச் செய்கிறது’ எனவும் பொருள்படும்.. ]
சங்கீதம் 29 : 10 (ECTA)
ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்; ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார்.
சங்கீதம் 29 : 11 (ECTA)
ஆண்டவர் தம் மக்களுக்கு ஆற்றல் அளிப்பாராக! ஆண்டவர் தம் மக்களுக்குச் சமாதானம் அருள்வாராக! ஆண்டவர் தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக!

1 2 3 4 5 6 7 8 9 10 11