சங்கீதம் 28 : 1 (ECTA)
உதவிக்காக மன்றாடல்
(தாவீதுக்கு உரியது) ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; என் கற்பாறையே, என் குரலைக் கேளாதவர்போல் இராதேயும்; நீர் மௌனமாய் இருப்பீராகில், படுகுழியில் இறங்குவோருள் நானும் ஒருவனாகிவிடுவேன்.
சங்கீதம் 28 : 2 (ECTA)
நான் உம்மிடம் உதவி வேண்டுகையில், உமது திருத்தூயகத்தை நோக்கி நான் கையுயர்த்தி வேண்டுகையில், பதில் அளித்தருளும்.
சங்கீதம் 28 : 3 (ECTA)
பொல்லாரோடு என்னை ஒழித்து விடாதேயும்! தீயவரோடு என்னை அழித்து விடாதேயும்! அவர்கள் தமக்கு அடுத்திருப்பாரோடு பேசுவதோ சமாதானம்; அவர்களது உள்ளத்தில் உள்ளதோ நயவஞ்சகம்.
சங்கீதம் 28 : 4 (ECTA)
அவர்களின் செய்கைக்கேற்ப, அவர்களின் தீச்செயலுக்கேற்ப, அவர்களுக்குத் தண்டனை அளியும்; அவர்கள் கைகள் செய்த தீவினைகளுக்கேற்ப, அவர்களுக்குத் தண்டனை வழங்கியருளும், அவர்களுக்குத் தகுந்த கைம்மாறு அளித்தருளும். [* திவெ 22:12.. ]
சங்கீதம் 28 : 5 (ECTA)
ஏனெனில், ஆண்டவரின் செயல்களையோ அவர் கைகள் உருவாக்கியவற்றையோ அவர்கள் மதிக்கவில்லை; ஆகையால் அவர் அவர்களைத்
தகர்த்தெறிவார்; ஒருபோதும் மீண்டும் கட்டி எழுப்பார்.
சங்கீதம் 28 : 6 (ECTA)
ஆண்டவர் போற்றி! போற்றி! ஏனெனில், அவர் என் கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தார்.
சங்கீதம் 28 : 7 (ECTA)
ஆண்டவர் என் வலிமை, என் கேடயம்; அவரை என் உள்ளம் நம்புகின்றது; நான் உதவி பெற்றேன்; ஆகையால் என் உள்ளம் களிகூர்கின்றது; நான் இன்னிசைபாடி அவருக்கு நன்றி கூறுவேன்.
சங்கீதம் 28 : 8 (ECTA)
ஆண்டவர் தாமே தம் மக்களின் வலிமை; தாம் திருப்பொழிவு செய்தவர்க்கு அவரே பாதுகாப்பான அரண்.
சங்கீதம் 28 : 9 (ECTA)
ஆண்டவரே, உம் மக்களுக்கு விடுதலை அளித்தருளும்; உமது உரிமைச் சொத்தான அவர்களுக்கு ஆசி வழங்கும்; அவர்களுக்கு ஆயராக இருந்து என்றென்றும் அவர்களைத் தாங்கிக்கொள்ளும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9