சங்கீதம் 26 : 1 (ECTA)
நேர்மையாளரின் விண்ணப்பம்
(தாவீதுக்கு உரியது)
ஆண்டவரே, நான் குற்றமற்றவன் என்பதை அறிவியும்; ஏனெனில், என் நடத்தை நேர்மையானது; நான் ஆண்டவரை நம்பினேன்; நான் தடுமாறவில்லை.
சங்கீதம் 26 : 2 (ECTA)
ஆண்டவரே, என்னைச் சோதித்து ஆராய்ந்து பாரும்; என் மனத்தையும் உள்ளத்தையும் புடமிட்டுப் பாரும்;
சங்கீதம் 26 : 3 (ECTA)
ஏனெனில், உமது பேரன்பு என் கண்முன் இருக்கின்றது; உமக்கு உண்மையாக நடந்து வருகிறேன்.
சங்கீதம் 26 : 4 (ECTA)
பொய்யரின் நடுவில் நான் அமர்வதில்லை; வஞ்சகரோடு நான் சேர்வதில்லை. [* மத் 5: 8 ]
சங்கீதம் 26 : 5 (ECTA)
தீயோரின் மன்றத்தை நான் வெறுக்கின்றேன்; பொல்லாரின் நடுவில் நான் அமர்வதில்லை.
சங்கீதம் 26 : 6 (ECTA)
மாசற்றவனாய் என் கைகளைக் கழுவுகின்றேன்; ஆண்டவரே, உம் பலிபீடத்தை வலம் வருவேன். [ …* ‘யாக்கோபே! உனது முகத்தை’ என்பது எபிரேய பாடம்.. ]
சங்கீதம் 26 : 7 (ECTA)
உரத்த குரலில் உமக்கு நன்றிப்பா பாடுகின்றேன்; வியத்தகு உம் செயல்களை எல்லாம் எடுத்துரைக்கின்றேன்;
சங்கீதம் 26 : 8 (ECTA)
ஆண்டவரே, நீர் குடிகொள்ளும் இல்லத்தை நான் விரும்புகின்றேன்; உமது மாட்சி தங்கியுள்ள இடத்தை நான் விரும்புகின்றேன்;
சங்கீதம் 26 : 9 (ECTA)
பாவிகளுக்குச் செய்வதுபோல் என் உயிரைப் பறித்து விடாதீர்! கொலை வெறியர்களுக்குச் செய்வதுபோல் என் வாழ்வை அழித்து விடாதீர்!
சங்கீதம் 26 : 10 (ECTA)
அவர்கள் கைகளில் தீச்செயல்கள்; அவர்கள் வலக்கையில்
நிறையக் கையூட்டு.
சங்கீதம் 26 : 11 (ECTA)
நானோ மாசற்றவனாய் நடந்து கொள்கின்றேன்; என்னை மீட்டருளும்; எனக்கு இரங்கியருளும்.
சங்கீதம் 26 : 12 (ECTA)
என் கால்கள் சமமான தளத்தில் நிற்கின்றன; மாபெரும் சபையில் ஆண்டவரைப் புகழ்ந்திடுவேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12