சங்கீதம் 25 : 1 (ECTA)
வழிகாட்டிப் பாதுகாக்குமாறு வேண்டல்
(தாவீதின் புகழ்ப்பா) ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.
சங்கீதம் 25 : 2 (ECTA)
என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுற விடாதேயும்; என் பகைவர் என்னைக் கண்டு நகைக்க விடாதேயும்.
சங்கீதம் 25 : 3 (ECTA)
உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும் வெட்கமுறுவதில்லை; காரணமின்றித் துரோகம் செய்பவரோ வெட்கத்திற்கு உள்ளாவர்.
சங்கீதம் 25 : 4 (ECTA)
ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். [* மத் 5: 8 ]
சங்கீதம் 25 : 5 (ECTA)
உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுவதும் நம்பியிருக்கின்றேன்;
சங்கீதம் 25 : 6 (ECTA)
ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. [ …* ‘யாக்கோபே! உனது முகத்தை’ என்பது எபிரேய பாடம்.. ]
சங்கீதம் 25 : 7 (ECTA)
என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்.
சங்கீதம் 25 : 8 (ECTA)
ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
சங்கீதம் 25 : 9 (ECTA)
எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார்.
சங்கீதம் 25 : 10 (ECTA)
ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.
சங்கீதம் 25 : 11 (ECTA)
ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு என் குற்றத்தை மன்னித்தருளும்; ஏனெனில், என் குற்றம் மிகப் பெரியது.
சங்கீதம் 25 : 12 (ECTA)
ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் எவரோ அவருக்குத் தாம் தேர்ந்துகொள்ளும் வழியை அவர் கற்பிப்பார்.
சங்கீதம் 25 : 13 (ECTA)
அவர் நலமுடன் வாழ்வார்; அவருடைய மரபினர்
நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வர்.
சங்கீதம் 25 : 14 (ECTA)
ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்;
சங்கீதம் 25 : 15 (ECTA)
என் கண்கள் எப்போதும் ஆண்டவரை நோக்கியிருக்கின்றன; அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார்.
சங்கீதம் 25 : 16 (ECTA)
என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும்; ஏனெனில், நான் துணையற்றவன்; துயருறுபவன்.
சங்கீதம் 25 : 17 (ECTA)
என் வேதனைகள் பெருகிவிட்டன; என் துன்பத்தினின்று என்னை விடுவித்தருளும்.
சங்கீதம் 25 : 18 (ECTA)
என் சிறுமையையும் வருத்தத்தையும் பாரும்; என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும்.
சங்கீதம் 25 : 19 (ECTA)
என் எதிரிகள் பெருகிவிட்டதைப் பாரும். அவர்கள் எத்துணைக் கொடுமையாய்
என்னை வெறுக்கின்றனர்!
சங்கீதம் 25 : 20 (ECTA)
என் உயிரைக் காப்பாற்றும்; என்னை விடுவித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ள என்னை வெட்கமுற விடாதேயும்.
சங்கீதம் 25 : 21 (ECTA)
வாய்மையும் நேர்மையும் எனக்கு அரணாய் இருக்கட்டும்; ஏனெனில், நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்.
சங்கீதம் 25 : 22 (ECTA)
கடவுளே, இஸ்ரயேலரை அவர்கள் படும் துன்பங்கள் அனைத்தினின்றும் மீட்டருளும்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22