சங்கீதம் 23 : 1 (ECTA)
ஆண்டவரே நம் ஆயர்
(தாவீதின் புகழ்ப்பா) ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
சங்கீதம் 23 : 2 (ECTA)
பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். [* திவெ 7:17; 24:1; 1 கொரி 10:26.. ]
சங்கீதம் 23 : 3 (ECTA)
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
சங்கீதம் 23 : 4 (ECTA)
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.
சங்கீதம் 23 : 5 (ECTA)
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.
சங்கீதம் 23 : 6 (ECTA)
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில்
நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.
❮
❯
1
2
3
4
5
6