சங்கீதம் 2 : 1 (ECTA)
கடவுள் தேர்ந்து கொண்ட அரசர் வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்? [* திப 4:25- 26 ]
சங்கீதம் 2 : 2 (ECTA)
ஆண்டவருக்கும் அவர்தம் அருள் பொழிவு பெற்றவர்க்கும் எதிராகப் பூவுலகின் அரசர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்; ஆள்வோர் ஒன்றுகூடிச் சதிசெய்கின்றார்கள்; [* திப 4:25- 26 ]
சங்கீதம் 2 : 3 (ECTA)
‛அவர்கள் பூட்டிய தளைகளைத் தகர்ப்போம்; அவர்கள் வைத்த கண்ணிகளை நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்’
என்கின்றார்கள்.
சங்கீதம் 2 : 4 (ECTA)
விண்ணுலகில் வீற்றிருப்பவர் எள்ளி நகைக்கின்றார்; என் தலைவர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கின்றார்.
சங்கீதம் 2 : 5 (ECTA)
அவர் சினமுற்று அவர்களை மிரட்டுகின்றார்; கடுஞ்சினத்தால் அவர்களைக் கலங்கடிக்கின்றார்;
சங்கீதம் 2 : 6 (ECTA)
‛என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தினேன்.’
சங்கீதம் 2 : 7 (ECTA)
ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; ‛நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். [* திப 13:33; எபி 1:5; 5: 5 ]
சங்கீதம் 2 : 8 (ECTA)
நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்.
சங்கீதம் 2 : 9 (ECTA)
இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்; குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்.’ [* திவெ 2:26-27; 12:5; 19:15.. ]
சங்கீதம் 2 : 10 (ECTA)
ஆகவே, மன்னர்களே, விவேகமாக நடந்துகொள்ளுங்கள்; பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள்.
சங்கீதம் 2 : 11 (ECTA)
அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்! அவர்முன் அகமகிழுங்கள்!
சங்கீதம் 2 : 12 (ECTA)
அவர் சினங்கொள்ளாதபடியும் நீங்கள் வழியில் அழியாதபடியும் அவரது காலடியை முத்தமிடுங்கள்; இல்லையேல், அவரது சினம் விரைவில் பற்றியெரியும்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் பேறுபெற்றோர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12