சங்கீதம் 19 : 1 (ECTA)
படைப்பில் கடவுளின் மாட்சி
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)
வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
சங்கீதம் 19 : 2 (ECTA)
ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.
சங்கீதம் 19 : 3 (ECTA)
அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
சங்கீதம் 19 : 4 (ECTA)
ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது;
அவை கூறும் செய்தி
உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். [* உரோ 10:18.. ]
சங்கீதம் 19 : 5 (ECTA)
மணவறையிலிருந்து புறப்படும் மணமகளைப் போல அது வருகின்றது; பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல மகிழ்வோடு அது தன் பாதையில் ஓடுகின்றது.
சங்கீதம் 19 : 6 (ECTA)
அது வானத்தின் ஒரு முனையிலிருந்து புறப்படுகின்றது; அதன் பாதை மறுமுனைவரையிலும் செல்கின்றது; அதன் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை.
சங்கீதம் 19 : 7 (ECTA)
ஆண்டவரின் திருச்சட்டம் ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது
ஞானம் அளிக்கின்றது.
சங்கீதம் 19 : 8 (ECTA)
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன.
சங்கீதம் 19 : 9 (ECTA)
ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை;
அவை முற்றிலும் நீதியானவை.
சங்கீதம் 19 : 10 (ECTA)
அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை.
சங்கீதம் 19 : 11 (ECTA)
அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன்; அவற்றைக் கடைப்பிடிப்போர்க்கு மிகுந்த பரிசுண்டு.
சங்கீதம் 19 : 12 (ECTA)
தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும்.
சங்கீதம் 19 : 13 (ECTA)
மேலும், ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்; அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன்.
சங்கீதம் 19 : 14 (ECTA)
என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14