சங்கீதம் 150 : 1 (ECTA)
தூயகத்தில் இறைவன் போற்றி! அல்லேலூயா! தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்! வலிமைமிகு விண்விரிவில் அவரைப் போற்றுங்கள்!
சங்கீதம் 150 : 2 (ECTA)
அவர்தம் வல்ல செயல்களுக்காய் அவரைப் போற்றுங்கள்! அவர்தம் எல்லையிலா மாண்பினைக் குறித்து அவரைப் போற்றுங்கள்!
சங்கீதம் 150 : 3 (ECTA)
எக்காளம் முழங்கியே அவரைப் போற்றுங்கள்! வீணையுடன் யாழிசைத்து அவரைப் போற்றுங்கள்.
சங்கீதம் 150 : 4 (ECTA)
மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து அவரைப் போற்றுங்கள்! யாழினை மீட்டி, குழலினை ஊதி அவரைப் போற்றுங்கள்!
சங்கீதம் 150 : 5 (ECTA)
சிலம்பிடும் சதங்கையுடன் அவரைப் போற்றுங்கள்! ‛கலீர்’ எனும் தாளத்துடன் அவரைப் போற்றுங்கள்!
சங்கீதம் 150 : 6 (ECTA)
அனைத்து உயிர்களே, ஆண்டவரைப் புகழ்ந்திடுக! அல்லேலூயா! [* திப 4:24; 14:15.. ]

1 2 3 4 5 6