சங்கீதம் 148 : 1 (ECTA)
அனைத்துலகே, ஆண்டவரைப் போற்றிடு! அல்லேலூயா! விண்ணுலகில் உள்ளவையே, ஆண்டவரைப் போற்றுங்கள்; உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள்.
சங்கீதம் 148 : 2 (ECTA)
அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்; அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்.
சங்கீதம் 148 : 3 (ECTA)
கதிரவனே, நிலாவே, அவரைப் போற்றுங்கள்; ஒளிவீசும் விண்மீன்களே, அவரைப் போற்றுங்கள்.
சங்கீதம் 148 : 4 (ECTA)
விண்ணுலக வானங்களே, அவரைப் போற்றுங்கள்; வானங்களின் மேலுள்ள நீர்த்திரளே, அவரைப் போற்றுங்கள்.
சங்கீதம் 148 : 5 (ECTA)
அவை ஆண்டவரின் பெயரைப் போற்றட்டும்; ஏனெனில், அவரது கட்டளையின்படி எல்லாம் படைக்கப்பட்டன;
சங்கீதம் 148 : 6 (ECTA)
அவரே அவற்றை என்றென்றும் நிலைபெறச் செய்தார்; மாறாத நியமத்தை அவற்றிற்கு ஏற்படுத்தினார். [* திப 4:24; 14:15.. ]
சங்கீதம் 148 : 7 (ECTA)
மண்ணுலகில் ஆண்டவரைப் போற்றுங்கள்; கடலின் பெரும் நாகங்களே, ஆழ்கடல் பகுதிகளே,
சங்கீதம் 148 : 8 (ECTA)
நெருப்பே, கல்மழையே, வெண்பனியே, மூடுபனியே, அவரது ஆணையை நிறைவேற்றும் பெருங்காற்றே,
சங்கீதம் 148 : 9 (ECTA)
மலைகளே, அனைத்துக் குன்றுகளே, கனிதரும் மரங்களே, அனைத்துக் கேதுரு மரங்களே,
சங்கீதம் 148 : 10 (ECTA)
காட்டு விலங்குகளே, அனைத்துக் கால்நடைகளே, ஊர்ந்து செல்லும் உயிரினங்களே, சிறகுள்ள பறவைகளே,
சங்கீதம் 148 : 11 (ECTA)
உலகின் அரசர்களே, எல்லா மக்களினங்களே, தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே,
சங்கீதம் 148 : 12 (ECTA)
இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே, நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.
சங்கீதம் 148 : 13 (ECTA)
அவர்கள் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக; அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது; அவரது மாட்சி விண்ணையும் மண்ணையும் கடந்தது.
சங்கீதம் 148 : 14 (ECTA)
அவர் தம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்தார்; அவருடைய அனைத்து அடியாரும் அவருக்கு நெருங்கிய அன்பார்ந்த மக்களாகிய இஸ்ரயேல் மக்களும் அவரைப் போற்றுவார்கள். அல்லேலூயா!
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14