சங்கீதம் 147 : 1 (ECTA)
எல்லாம் வல்ல இறைவன் போற்றி அல்லேலூயா! நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது; அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது.
சங்கீதம் 147 : 2 (ECTA)
ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்; நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார்;
சங்கீதம் 147 : 3 (ECTA)
உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார்.
சங்கீதம் 147 : 4 (ECTA)
விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார்.
சங்கீதம் 147 : 5 (ECTA)
நம் தலைவர் மாண்புமிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது.
சங்கீதம் 147 : 6 (ECTA)
ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்; பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார். [* திப 4:24; 14:15.. ]
சங்கீதம் 147 : 7 (ECTA)
ஆண்டவருக்கு நன்றி செலுத்திப் பாடுங்கள்; நம் கடவுளை யாழ்கொண்டு புகழ்ந்து பாடுங்கள்.
சங்கீதம் 147 : 8 (ECTA)
அவர் வானத்தை மேகங்களால் மறைக்கின்றார்; பூவுலகின்மீது மழையைப் பொழிகின்றார்; மலைகளில் புல்லை முளைக்கச் செய்கின்றார்.
சங்கீதம் 147 : 9 (ECTA)
கால்நடைகளுக்கும் கரையும் காக்கைக் குஞ்சுகளுக்கும், அவர் இரை கொடுக்கின்றார்.
சங்கீதம் 147 : 10 (ECTA)
குதிரையின் வலிமையில் அவர் மகிழ்ச்சி காண்பதில்லை; வீரனின் கால்வலிமையையும் அவர் விரும்புவதில்லை.
சங்கீதம் 147 : 11 (ECTA)
தமக்கு அஞ்சி நடந்து தம் பேரன்புக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரிடம் அவர் மகிழ்ச்சி கொள்கின்றார்.
சங்கீதம் 147 : 12 (ECTA)
எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!
சங்கீதம் 147 : 13 (ECTA)
அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார்.
சங்கீதம் 147 : 14 (ECTA)
அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.
சங்கீதம் 147 : 15 (ECTA)
அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது.
சங்கீதம் 147 : 16 (ECTA)
அவர் வெண்கம்பளிபோல் பனியைப் பொழிகின்றார்; சாம்பலைப்போல் உறைபனியைத் தூவுகின்றார்;
சங்கீதம் 147 : 17 (ECTA)
பனிக்கட்டியைத் துகள்துகளாக விழச் செய்கின்றார்; அவர் வரவிடும் குளிரைத் தாங்கக் கூடியவர் யார்?
சங்கீதம் 147 : 18 (ECTA)
அவர் தம் கட்டளையால் அவற்றை உருகச் செய்கின்றார்; தம் காற்றை வீசச் செய்ய, நீர் ஓடத் தொடங்குகின்றது.
சங்கீதம் 147 : 19 (ECTA)
யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.
சங்கீதம் 147 : 20 (ECTA)
அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது; அல்லேலூயா!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20