சங்கீதம் 140 : 1 (ECTA)
பாதுகாப்புக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)
ஆண்டவரே! தீயோரிடமிருந்து என்னை விடுவியும்; வன்செயல் செய்வோரிடமிருந்து என்னைப் பாதுகாத்தருளும்.
சங்கீதம் 140 : 2 (ECTA)
அவர்கள் தம் மனத்தில் தீயனவற்றை திட்டமிடுகின்றனர்; நாள்தோறும் சச்சரவுகளைக் கிளப்பி விடுகின்றனர்.
சங்கீதம் 140 : 3 (ECTA)
அவர்கள் பாம்பெனத் தம் நாவைக் கூர்மையாக்கிக்கொள்கின்றனர்; அவர்களது உதட்டில் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சே! (சேலா) [* உரோ 3:13.. ]
சங்கீதம் 140 : 4 (ECTA)
ஆண்டவரே! தீயோரின் கையினின்று என்னைக் காத்தருளும்; கொடுமை செய்வோரிடமிருந்து என்னைப் பாதுகாத்தருளும்; அவர்கள் என் காலை வாரிவிடப் பார்க்கின்றார்கள்.
சங்கீதம் 140 : 5 (ECTA)
செருக்குற்றோர் எனக்கெனக் கண்ணியை மறைவாக வைக்கின்றனர்; தம் கயிறுகளால் எனக்கு சுருக்கு வைக்கின்றனர்; (சேலா)
சங்கீதம் 140 : 6 (ECTA)
நானோ ஆண்டவரை நோக்கி இவ்வாறு வேண்டினேன்; நீரே என் இறைவன்! ஆண்டவரே! உம் இரக்கத்திற்காக நான் எழுப்பும் குரலுக்குச் செவிசாயும்.
சங்கீதம் 140 : 7 (ECTA)
என் தலைவராகிய ஆண்டவரே! எனக்கு விடுதலை வழங்கும் வல்லவரே! போர் நடந்த நாளில் என் தலையை மறைத்துக் காத்தீர்!
சங்கீதம் 140 : 8 (ECTA)
ஆண்டவரே! தீயோரின் விருப்பங்களை நிறைவேற்றாதேயும்; அவர்களின் சூழ்ச்சிகளை வெற்றி பெறவிடாதேயும். இல்லையெனில், அவர்கள் ஆணவம் கொள்வார்கள். (சேலா)
சங்கீதம் 140 : 9 (ECTA)
என்னைச் சூழ்பவர்கள் செருக்குடன் நடக்கின்றார்கள்; அவர்கள் செய்வதாகப் பேசும் தீமை அவர்கள்மேலே விழுவதாக!
சங்கீதம் 140 : 10 (ECTA)
நெருப்புத் தழல் அவர்கள்மேல் விழுவதாக! மீளவும் எழாதபடி படுகுழியில் தள்ளப்படுவார்களாக!
சங்கீதம் 140 : 11 (ECTA)
புறங்கூறும் நாவுடையோர் உலகில் நிலைத்து வாழாதிருப்பராக! வன்செயல் செய்வாரைத் தீமை விரட்டி வேட்டையாடுவதாக!
சங்கீதம் 140 : 12 (ECTA)
ஏழைகளின் நீதிக்காக ஆண்டவர் வழக்காடுவார் எனவும் எளியவர்களுக்கு நீதி வழங்குவார் எனவும் அறிவேன்.
சங்கீதம் 140 : 13 (ECTA)
மெய்யாகவே, நீதிமான்கள் உமது பெயருக்கு நன்றி செலுத்துவார்கள்; நேர்மையுள்ளோர் உம் திருமுன் வாழ்வர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13