சங்கீதம் 14 : 1 (ECTA)
இறைப்பற்று இல்லார்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதுக்கு உரியது)
(திபா 53)
‛கடவுள் இல்லை’ என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்; அவர்கள் சீர்கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். நல்லது செய்வோர் எவருமே இல்லை. [* உரோ 3:10-12.. ]
சங்கீதம் 14 : 2 (ECTA)
ஆண்டவர் விண்ணகத்தினின்று மானிடரை உற்றுநோக்குகின்றார்; மதிநுட்பமுள்ளோர், கடவுளை நாடுவோர் எவராவது உண்டோ எனப் பார்க்கின்றார். [* உரோ 3:10-12.. ]
சங்கீதம் 14 : 3 (ECTA)
எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்; ஒருமிக்கக் கெட்டுப்போயினர்; நல்லது செய்வார் யாரும் இல்லை; ஒருவர்கூட இல்லை. [* உரோ 3:10-12.. ]
சங்கீதம் 14 : 4 (ECTA)
தீங்கிழைக்கும் யாவரும் அறிவை இழந்துவிட்டார்களோ? உணவை விழுங்குவதுபோல் என் மக்களை விழுங்கப்பார்க்கிறார்களே! அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடுவதுமில்லை.
சங்கீதம் 14 : 5 (ECTA)
அவர்கள் அஞ்சி நடுங்குவர்; ஏனெனில், கடவுள் நேர்மையாளரின் வழிமரபோடு இருக்கின்றார்.
சங்கீதம் 14 : 6 (ECTA)
எளியோரின் திட்டத்தை அவர்கள் தோல்வியுறச் செய்கின்றார்கள்; ஆனால், ஆண்டவர் எளியோர்க்கு அடைக்கலமாய் இருக்கின்றார்.
சங்கீதம் 14 : 7 (ECTA)
சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக! ஆண்டவர் தம் மக்களுக்கு மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக! இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!

1 2 3 4 5 6 7