சங்கீதம் 137 : 1 (ECTA)
நாடுகடத்தப்பட்டோரின் புலம்பல் பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம்.
சங்கீதம் 137 : 2 (ECTA)
அங்கிருந்த அலரிச் செடிகள் மீது, எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம்.
சங்கீதம் 137 : 3 (ECTA)
ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். ‛சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்’ என்றனர்.
சங்கீதம் 137 : 4 (ECTA)
ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?
சங்கீதம் 137 : 5 (ECTA)
எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக!
சங்கீதம் 137 : 6 (ECTA)
உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!
சங்கீதம் 137 : 7 (ECTA)
ஆண்டவரே! ஏதோமின் புதல்வருக்கு எதிராக, எருசலேம் வீழ்ந்த நாளை நினைத்துக் கொள்ளும்! ‘அதை இடியுங்கள்; அடியோடு இடித்துக் தள்ளுங்கள்’ என்று அவர்கள் எவ்வாறெல்லாம் சொன்னார்கள்!
சங்கீதம் 137 : 8 (ECTA)
பாழாக்கும் நகர் பாபிலோனே! நீ எங்களுக்குச் செய்தவற்றை உனக்கே திருப்பிச் செய்வோர் பேறுபெற்றோர்! [* திவெ 18:6.. ]
சங்கீதம் 137 : 9 (ECTA)
உன் குழந்தைகளைப் பிடித்து, பாறையின்மேல் மோதி அடிப்போர் பேறுபெற்றோர்!
❮
❯
1
2
3
4
5
6
7
8
9