சங்கீதம் 136 : 1 (ECTA)
என்றுமுள பேரன்பு வாழியவே! ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர். என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 100:5; 106:1; 118:1; எரே 33: 11 ]
சங்கீதம் 136 : 2 (ECTA)
தெய்வங்களின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
சங்கீதம் 136 : 3 (ECTA)
தலைவர்களின் தலைவருக்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
சங்கீதம் 136 : 4 (ECTA)
தாம் ஒருவராய் மாபெரும் அருஞ்செயல்களைப் புரிபவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
சங்கீதம் 136 : 5 (ECTA)
வான்வெளியை மதிநுட்பத்தால் உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* தொநூ 1: 1 ]
சங்கீதம் 136 : 6 (ECTA)
கடல்மீது மண்ணகத்தை விரித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* தொநூ 1: 2 ]
சங்கீதம் 136 : 7 (ECTA)
பெருஞ்சுடர்களை உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* தொநூ 1: 16 ]
சங்கீதம் 136 : 8 (ECTA)
பகலை ஆள்வதற்கெனக் கதிரவனை உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* தொநூ 1: 16 ]
சங்கீதம் 136 : 9 (ECTA)
இரவை ஆள்வதற்கென நிலாவையும் விண்மீன்களையும் உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* தொநூ 1: 16 ]
சங்கீதம் 136 : 10 (ECTA)
எகிப்தின் தலைப்பேறுகளைக் கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* விப 12: 29 ]
சங்கீதம் 136 : 11 (ECTA)
அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரயேலை வெளிக்கொணர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* விப 12: 51 ]
சங்கீதம் 136 : 12 (ECTA)
தோளின் வலிமையாலும் ஓங்கிய புயத்தாலும் அதைச் செய்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
சங்கீதம் 136 : 13 (ECTA)
செங்கடலை இரண்டாகப் பிரித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* விப 14:21- 29 ]
சங்கீதம் 136 : 14 (ECTA)
அதன் நடுவே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* விப 14:21- 29 ]
சங்கீதம் 136 : 15 (ECTA)
பார்வோனையும் அவன் படைகளையும் செங்கடலில் மூழ்கடித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* விப 14:21- 29 ]
சங்கீதம் 136 : 16 (ECTA)
பாலை நிலத்தில் தம் மக்களை வழிநடத்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
சங்கீதம் 136 : 17 (ECTA)
மாபெரும் மன்னர்களை வெட்டி வீழ்த்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
சங்கீதம் 136 : 18 (ECTA)
வலிமைமிகு மன்னர்களைக் கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
சங்கீதம் 136 : 19 (ECTA)
எமோரியரின் மன்னன் சீகோனைக் கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* எண் 21:21- 30 ]
சங்கீதம் 136 : 20 (ECTA)
பாசானின் மன்னன் ஓகைக் கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு. [* எண் 21:31-35.. ]
சங்கீதம் 136 : 21 (ECTA)
அவர்களது நாட்டைத் தம் மக்களுக்கு உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
சங்கீதம் 136 : 22 (ECTA)
அதைத் தம் அடியார்களாகிய இஸ்ரயேலர்க்கு உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
சங்கீதம் 136 : 23 (ECTA)
தாழ்வுற்றிருந்த நம்மை நினைவு கூர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
சங்கீதம் 136 : 24 (ECTA)
நம் எதிரிகளினின்று நம்மை விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
சங்கீதம் 136 : 25 (ECTA)
உடல்கொண்ட அனைத்திற்கும் உணவூட்டுபவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
சங்கீதம் 136 : 26 (ECTA)
விண்ணுலகின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26