சங்கீதம் 133 : 1 (ECTA)
சகோதர அன்பின் சிறப்பு
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல், தாவீதுக்கு உரியது)
சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது!
சங்கீதம் 133 : 2 (ECTA)
அது ஆரோனின் தலையினிலே ஊற்றப் பெற்ற நறுமணத்தைலம் அவருடைய தாடியினின்று வழிந்தோடி அவர்தம் அங்கியின் விளிம்பை நனைப்பதற்கு ஒப்பாகும்.
சங்கீதம் 133 : 3 (ECTA)
அது எர்மோனின் மலைப்பனி சீயோனின் மலைகள்மேல் இறங்குவதற்கு ஒப்பாகும்; ஏனெனில், அங்கிருந்தே என்றுமுள வாழ்வென்னும் ஆசிதனை ஆண்டவர் பொழிந்தருள்வார்.

1 2 3