சங்கீதம் 132 : 1 (ECTA)
{திருக்கோவில் வாழ்த்து[BR](சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)} [PS] [QS][SS] ஆண்டவரே! தாவீதையும்[SE][SS] அவர் பட்ட[SE][SS] இன்னல்கள் அனைத்தையும்[SE][SS] நினைவு கூர்ந்தருளும்.[SE][QE]
சங்கீதம் 132 : 2 (ECTA)
[QS][SS] அவர் ஆண்டவராகிய உமக்கு[SE][SS] ஆணையிட்டுக் கூறியதை,[SE][SS] யாக்கோபின் வல்லவராகிய[SE][SS] உமக்குச் செய்த பொருத்தனையை[SE][SS] நினைவுகூர்ந்தருளும்.[SE][QE]
சங்கீதம் 132 : 3 (ECTA)
[QS][SS] “ஆண்டவருக்கு ஓர் இடத்தை,[SE][SS] யாக்கோபின் வல்லவருக்கு[SE][SS] ஒர் உறைவிடத்தை[SE][SS] நான் அமைக்கும் வரையில்,[SE][QE]
சங்கீதம் 132 : 4 (ECTA)
[QS][SS] என் இல்லமாகிய கூடாரத்தினுள்[SE][SS] செல்லமாட்டேன்;[SE][SS] படுப்பதற்காக என் மஞ்சத்தில்[SE][SS] ஏறமாட்டேன்;[SE][QE]
சங்கீதம் 132 : 5 (ECTA)
[QS][SS] என் கண்களைத் தூங்க விடமாட்டேன்;[SE][SS] என் இமைகளை மூடவிடமாட்டேன்”[SE][SS] என்று அவர் சொன்னாரே.[SE][QE]
சங்கீதம் 132 : 6 (ECTA)
[QS][SS] திருப்பேழை எப்ராத்தாவில்[SE][SS] இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்;[SE][SS] வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம்.[SE][QE]
சங்கீதம் 132 : 7 (ECTA)
[QS][SS] “அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்![SE][SS] வாருங்கள்;[SE][SS] அவரது திருவடிதாங்கி[SE][SS] முன் வீழ்ந்து பணிவோம்!” என்றோம்.[SE][QE]
சங்கீதம் 132 : 8 (ECTA)
[QS][SS] ஆண்டவரே! நீர் உமது[SE][SS] வல்லமை விளங்கும் பேழையுடன்[SE][SS] உமது உறைவிடத்திற்கு[SE][SS] எழுந்தருள்வீராக![SE][QE]
சங்கீதம் 132 : 9 (ECTA)
[QS][SS] உம் குருக்கள் நீதியை[SE][SS] ஆடையென அணிவார்களாக![SE][SS] உம் அன்பர்கள் அக்களிப்பார்களாக! [* மத் 1:21; தீத் 2:14.[QE] ] [SE][QE]
சங்கீதம் 132 : 10 (ECTA)
[QS][SS] நீர் திருப்பொழிவு செய்த அரசரை,[SE][SS] உம் ஊழியராகிய தாவீதின் பொருட்டுப்[SE][SS] புறக்கணியாதேயும்.[SE][QE]
சங்கீதம் 132 : 11 (ECTA)
[QS][SS] ஆண்டவர் தாவீதுக்கு[SE][SS] உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்;[SE][SS] அவர்தம் வாக்குறுதியினின்று[SE][SS] பின்வாங்கமாட்டார்;[SE][SS] “உனக்குப் பிறந்த ஒருவனை[SE][SS] அரசனாக ஏற்படுத்தி[SE][SS] உன் அரியணையில்[SE][SS] வீற்றிருக்கச் செய்வேன்.[SE][QE]
சங்கீதம் 132 : 12 (ECTA)
[QS][SS] உன் மைந்தர்[SE][SS] என் உடன்படிக்கையையும்,[SE][SS] நான் அவர்களுக்குக் கற்பிக்கும்[SE][SS] என் நியமங்களையும் கடைப்பிடித்தால்,[SE][SS] அவர்களுடைய மைந்தரும்[SE][SS] என்றென்றும் உன் அரியணையில்[SE][SS] வீற்றிருப்பர்.”[SE][QE]
சங்கீதம் 132 : 13 (ECTA)
[QS][SS] ஆண்டவர் சீயோனைத்[SE][SS] தேர்ந்தெடுத்தார்;[SE][SS] அதையே தம்[SE][SS] உறைவிடமாக்க விரும்பினார்.[SE][QE]
சங்கீதம் 132 : 14 (ECTA)
[QS][SS] “இது என்றென்றும்[SE][SS] நான் இளைப்பாறும் இடம்;[SE][SS] இதை நான் விரும்பினதால்[SE][SS] இதையே என் உறைவிடமாக்குவேன்.[SE][QE]
சங்கீதம் 132 : 15 (ECTA)
[QS][SS] இங்கே என் ஆசியால்[SE][SS] உணவுப் பொருள்[SE][SS] தாராளமாகக் கிடைக்கச்செய்வேன்;[SE][SS] அதனை ஏழைகள் உண்டு[SE][SS] நிறைவு பெறுமாறு செய்வேன்.[SE][QE]
சங்கீதம் 132 : 16 (ECTA)
[QS][SS] இங்குள்ள குருக்களுக்கு[SE][SS] மீட்பெனும் உடையை உடுத்துவேன்;[SE][SS] இங்குள்ள என் அன்பர்கள்[SE][SS] மகிழ்ந்து ஆரவாரிப்பார்கள்.[SE][QE]
சங்கீதம் 132 : 17 (ECTA)
[QS][SS] இங்கே தாவீதின் மரபிலிருந்து[SE][SS] ஒரு வல்லவனை எழச்செய்வேன்;[SE][SS] நான் திருப்பொழிவு செய்தவனுக்காக[SE][SS] ஒரு ஒளிவிளக்கை ஏற்பாடு செய்துள்ளேன்.[SE][QE]
சங்கீதம் 132 : 18 (ECTA)
[QS][SS] அவனுடைய எதிரிகளுக்கு[SE][SS] இகழ்ச்சியெனும்[SE][SS] உடையை உடுத்துவேன்;[SE][SS] அவன்மீதோ அவனது மணிமுடி[SE][SS] ஒளிவீசும்.”[SE][PE][QE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18

BG:

Opacity:

Color:


Size:


Font: