சங்கீதம் 131 : 1 (ECTA)
பணிவுமிகு மன்றாட்டு
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்: தாவீதுக்கு உரியது) ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை! என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை.
சங்கீதம் 131 : 2 (ECTA)
மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது.
சங்கீதம் 131 : 3 (ECTA)
இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு!
❮
❯
1
2
3