சங்கீதம் 129 : 1 (ECTA)
இஸ்ரயேலின் எதிரிகளை முன்னிட்டு மன்றாடியது
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)
‟என் இளமை முதற்கொண்டே என்னைப் பெரிதும் துன்புறுத்தினார்கள்” – இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக!
சங்கீதம் 129 : 2 (ECTA)
‟என் இளமை முதற்கொண்டே என்னைப் பெரிதும் துன்புறுத்தினார்கள்; எனினும், அவர்கள் என்மீது வெற்றி பெறவில்லை.
சங்கீதம் 129 : 3 (ECTA)
உழவர் என் முதுகின்மீது உழுது நீண்ட படைச்சால்களை உண்டாக்கினர்.”
சங்கீதம் 129 : 4 (ECTA)
ஆண்டவர் நீதியுள்ளவர்; எனவே, பொல்லார் கட்டிய கயிறுகளை அவர் அறுத்தெறிந்தார்.
சங்கீதம் 129 : 5 (ECTA)
சீயோனைப் பகைக்கும் அனைவரும் அவமானப்பட்டுப் புறமுதுகிடுவராக!
சங்கீதம் 129 : 6 (ECTA)
கூரைமேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; வளருமுன் அது உலர்ந்துபோகும்.
சங்கீதம் 129 : 7 (ECTA)
அதை அறுப்போரின் கைக்கு, ஒரு பிடி கூடக் கிடைக்காது; அரிகளைச் சேர்த்தால் ஒரு சுமைகூடத் தேறாது.
சங்கீதம் 129 : 8 (ECTA)
வழிப்போக்கரும் அவர்களைப் பார்த்து, ‛ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்குவாராக!’ என்றோ ‛ஆண்டவரின் பெயரால் ஆசி வழங்குகிறோம்’ என்றோ சொல்லார்.

1 2 3 4 5 6 7 8