சங்கீதம் 128 : 1 (ECTA)
ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதன் பயன்கள்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்) ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
சங்கீதம் 128 : 2 (ECTA)
உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!
சங்கீதம் 128 : 3 (ECTA)
உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர்.
சங்கீதம் 128 : 4 (ECTA)
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
சங்கீதம் 128 : 5 (ECTA)
ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக!
சங்கீதம் 128 : 6 (ECTA)
நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீராக! இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!
❮
❯
1
2
3
4
5
6