சங்கீதம் 126 : 1 (ECTA)
விடுதலைக்காக மன்றாடல்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)
சீயோனின் அடிமை நிலையை
ஆண்டவர் மாற்றினபோது,
நாம் ஏதோ கனவு
கண்டவர் போல இருந்தோம்.
சங்கீதம் 126 : 2 (ECTA)
அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது; ‟ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்” என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
சங்கீதம் 126 : 3 (ECTA)
ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.
சங்கீதம் 126 : 4 (ECTA)
ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.
சங்கீதம் 126 : 5 (ECTA)
கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.
சங்கீதம் 126 : 6 (ECTA)
விதை எடுத்துச் செல்லும்போது – செல்லும்போது – அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது – வரும்போது – அக்களிப்போடு வருவார்கள்.

1 2 3 4 5 6