சங்கீதம் 119 : 1 (ECTA)
ஆண்டவரின் திருச்சட்டம் மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
சங்கீதம் 119 : 2 (ECTA)
அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர்.
சங்கீதம் 119 : 3 (ECTA)
அநீதி செய்யாமல் அவரது வழியில் நடப்போர் பேறுபெற்றோர்.
சங்கீதம் 119 : 4 (ECTA)
ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்.
சங்கீதம் 119 : 5 (ECTA)
உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்!
சங்கீதம் 119 : 6 (ECTA)
உம் கட்டளைகளை எல்லாம் கருத்தில் கொண்டிருந்தால், இகழ்ச்சியுறேன்;
சங்கீதம் 119 : 7 (ECTA)
உம் நீதிநெறிகளை நான் கற்றுக்கொண்டு நேரிய உள்ளத்தோடு உம்மைப் புகழ்வேன்.
சங்கீதம் 119 : 8 (ECTA)
உம் விதிமுறைகளை நான் கடைப்பிடிப்பேன்; என்னை ஒருபோதும் கைவிட்டுவிடாதேயும்.
சங்கீதம் 119 : 9 (ECTA)
திருச்சட்டப்படி நடத்தல் இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ?
சங்கீதம் 119 : 10 (ECTA)
முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளைவிட்டு என்னை விலகவிடாதேயும்.
சங்கீதம் 119 : 11 (ECTA)
உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.
சங்கீதம் 119 : 12 (ECTA)
ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.
சங்கீதம் 119 : 13 (ECTA)
உம் வாயினின்று வரும் நீதித்தீர்ப்புகளை எல்லாம் என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.
சங்கீதம் 119 : 14 (ECTA)
பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.
சங்கீதம் 119 : 15 (ECTA)
உம் நியமங்களைக் குறித்து நான் சிந்திப்பேன்; உம் நெறிகளில் என் சிந்தையைச் செலுத்துவேன்;
சங்கீதம் 119 : 16 (ECTA)
உம் விதிமுறைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்; உம் வாக்குகளை நான் மறக்கமாட்டேன்.
சங்கீதம் 119 : 17 (ECTA)
திருச்சட்டம் தரும் இன்பம் உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன்.
சங்கீதம் 119 : 18 (ECTA)
உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும்.
சங்கீதம் 119 : 19 (ECTA)
இவ்வுலகில் நான் அன்னியனாய் உள்ளேன்; உம் கட்டளைகளை என்னிடமிருந்து மறைக்காதேயும்.
சங்கீதம் 119 : 20 (ECTA)
எந்நேரமும் உம் நீதிநெறிகளை முன்னிட்டு என் உள்ளம் ஏங்கி உருகுகின்றது.
சங்கீதம் 119 : 21 (ECTA)
செருக்குற்றோரைக் கண்டிக்கின்றிர்; உம் கட்டளைகளைப் புறக்கணிப்போர் சபிக்கப்பட்டவரே.
சங்கீதம் 119 : 22 (ECTA)
பழிச்சொல்லையும், இழிவையும் என்னிடமிருந்து அகற்றியருளும்; ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடித்துள்ளேன்.
சங்கீதம் 119 : 23 (ECTA)
தலைவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், உம் ஊழியன் உம்முடைய விதிமுறைகளைக் குறித்தே சிந்திக்கின்றேன்.
சங்கீதம் 119 : 24 (ECTA)
ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவையே எனக்கு அறிவுரையாளர்.
சங்கீதம் 119 : 25 (ECTA)
திருச்சட்டத்தின்படி நடக்க உறுதி கொள்ளல் நான் புழுதியில் வீழ்ந்து கிடக்கின்றேன்; உம் வாக்கின்படி எனக்கு வாழ்வளித்தருளும்.
சங்கீதம் 119 : 26 (ECTA)
என் வழிமுறைகளை உமக்கு எடுத்துச் சொன்னேன்; நீர் என் மன்றாட்டைக் கேட்டருளினீர்; உம் விதிமுறைகளை எனக்குக் கற்றுத்தாரும்.
சங்கீதம் 119 : 27 (ECTA)
உம் நியமங்கள் காட்டும் வழியை என்றும் உணர்த்தியருளும்; உம் வியத்தகு செயல்கள்பற்றி நான் சிந்தனை செய்வேன்.
சங்கீதம் 119 : 28 (ECTA)
துயரத்தால் என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது; உமது வாக்கின்படி என்னைத் திடப்படுத்தும்.
சங்கீதம் 119 : 29 (ECTA)
பொய் வழியை என்னைவிட்டு விலக்கியருளும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும்.
சங்கீதம் 119 : 30 (ECTA)
உண்மையின் பாதையை நான் தேர்ந்துகோண்டேன்; உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன்.
சங்கீதம் 119 : 31 (ECTA)
உம் ஒழுங்குமுறைகளை நான் உறுதியாய்ப் பற்றிக்கொண்டுள்ளேன்; ஆண்டவரே! என்னை வெட்கமடையவிடாதேயும்.
சங்கீதம் 119 : 32 (ECTA)
நீர் என் அறிவை விரிவாக்கும்போது, உம் கட்டளைகள் காட்டும் வழியில் நான் விரைந்து செல்வேன்.
சங்கீதம் 119 : 33 (ECTA)
நுண்ணறிவுக்காக வேண்டல் ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்; நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன்.
சங்கீதம் 119 : 34 (ECTA)
உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வுதாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன்.
சங்கீதம் 119 : 35 (ECTA)
உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
சங்கீதம் 119 : 36 (ECTA)
உம் ஒழுங்குமுறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும்; தன்னலத்தை நாடவிடாதேயும்.
சங்கீதம் 119 : 37 (ECTA)
வீணானவற்றை நான் பாராதபடி என் கண்களைத் திருப்பிவிடும்; உம் வழிகளின் வாயிலாய் எனக்கு வாழ்வளித்தருளும்.
சங்கீதம் 119 : 38 (ECTA)
உமக்கு அஞ்சி நடப்போர்க்கு அளித்த வாக்குறுதியை உம் ஊழியனுக்கும் நிறைவேற்றியருளும்.
சங்கீதம் 119 : 39 (ECTA)
என்னை அச்சுறுத்தும் பழிச்சொல் எதற்கும் என்னை உள்ளாக்காதேயும்; ஏனெனில், உம் நீதிநெறிகள் நலமார்ந்தவை.
சங்கீதம் 119 : 40 (ECTA)
உம் நியமங்களைப் பெரிதும் விரும்பினேன்; நீர் நீதியுள்ளவராய் இருப்பதால் எனக்கு வாழ்வளியும்.
சங்கீதம் 119 : 41 (ECTA)
திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை ஆண்டவரே! உமது பேரன்பு எனக்குக் கிடைக்கச் செய்யும்; உமது வாக்குறுதியின்படி நீர் என்னை மீட்பீராக!
சங்கீதம் 119 : 42 (ECTA)
அப்போது, என்னைப் பழிப்போர்க்கு நான் ஏற்ற பதில் கூறுவேன்; ஏனெனில், உமது வாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு.
சங்கீதம் 119 : 43 (ECTA)
என் வாயினின்று உண்மையின் சொற்கள் நீங்கவிடாதேயும்; ஏனெனில், உம் நீதிநெறிகள்மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.
சங்கீதம் 119 : 44 (ECTA)
உமது திருச்சட்டத்தை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்; என்றென்றும் எக்காலமும் அதைப் பின்பற்றுவேன்.
சங்கீதம் 119 : 45 (ECTA)
உம் நியமங்களை நான் நாடியுள்ளதால் பரந்த பாதையில் தடையின்றி நான் நடப்பேன்.
சங்கீதம் 119 : 46 (ECTA)
உம் ஒழுங்குமுறைகளைப் பற்றி நான் அரசர் முன்னிலையிலும் பேசுவேன்; வெட்கமுறமாட்டேன்.
சங்கீதம் 119 : 47 (ECTA)
உம் கட்டளைகளில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்; அவற்றைப் பெரிதும் விரும்புகின்றேன்.
சங்கீதம் 119 : 48 (ECTA)
நான் விரும்பும் உம் கட்டளைகளை நோக்கி என் கைகளை உயர்த்துகின்றேன்; உம் விதிமுறைகளைப் பற்றி நான் சிந்திப்பேன்.
சங்கீதம் 119 : 49 (ECTA)
திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை உம் ஊழியனுக்கு நீர் தந்த வாக்கை நினைவுகூரும்; அதனால் எனக்கு நம்பிக்கை அளித்தீர்.
சங்கீதம் 119 : 50 (ECTA)
உம் வாக்கு என் துன்பத்தில் எனக்கு ஆறுதல் அளிக்கின்றது; ஏனெனில், அது எனக்கு வாழ்வளிக்கின்றது.
சங்கீதம் 119 : 51 (ECTA)
செருக்குற்றோர் என்னை அளவின்றி ஏளனம் செய்கின்றனர்; ஆனால், உம் திருச்சட்டத்தினின்று நான் விலகவில்லை.
சங்கீதம் 119 : 52 (ECTA)
ஆண்டவரே! முற்காலத்தில் நீர் அளித்த நீதித் தீர்ப்புகளை நான் நினைவு கூர்கின்றேன்; அவற்றால் நான் ஆறுதல் அடைகின்றேன்.
சங்கீதம் 119 : 53 (ECTA)
உம் திருச்சட்டத்தைக் கைவிடும் தீயோரைப் பார்க்கும்போது சீற்றம் என்னைக் கவ்விக்கொள்கின்றது.
சங்கீதம் 119 : 54 (ECTA)
என் வாழ்க்கைப் பயணத்தில் உம் விதிமுறைகள் எனக்குப் புகழ்ப் பாக்களாய் உள்ளன.
சங்கீதம் 119 : 55 (ECTA)
ஆண்டவரே! இரவிலும் நான் உமது பெயரை நினைவு கூர்கின்றேன்; உமது திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பேன்.
சங்கீதம் 119 : 56 (ECTA)
நான் இந்நிலையை அடைந்துள்ளது உமது நியமங்களைக் கடைப்பிடிப்பதால்தான்.
சங்கீதம் 119 : 57 (ECTA)
திருச்சட்டத்தின் மீது ஆர்வம் ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு; உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன்.
சங்கீதம் 119 : 58 (ECTA)
என் முழுமனத்தோடு உம் திருமுகத்தை நாடினேன்; உமது வாக்குறுதிக்கேற்ப எனக்கு அருள்கூரும்.
சங்கீதம் 119 : 59 (ECTA)
நான் நடக்கும் வழிகளை நன்கு ஆய்ந்தேன்; உம் ஒழுங்குமுறைகளின் பக்கமாய் அடியெடுத்து வைத்தேன்.
சங்கீதம் 119 : 60 (ECTA)
உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்க நான் விரைகின்றேன்; காலம் தாழ்த்தவில்லை.
சங்கீதம் 119 : 61 (ECTA)
தீயோரின் கட்டுகள் என்னை இறுக்குகின்றன; ஆயினும், உம் திருச்சட்டத்தை நான் மறவேன்.
சங்கீதம் 119 : 62 (ECTA)
நீதிநிறை உம் தீர்ப்புகளைக் குறித்து, உம்மைப் புகழ்ந்துபாட நள்ளிரவில் எழுகின்றேன்.
சங்கீதம் 119 : 63 (ECTA)
உமக்கு அஞ்சி நடப்போர் யாவர்க்கும் உம் நியமங்களைக் கடைப்பிடிப்போர்க்கும் நான் நண்பன்.
சங்கீதம் 119 : 64 (ECTA)
ஆண்டவரே! உமது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது; உம் விதிமுறைகளை எனக்குக் கற்பியும்!
சங்கீதம் 119 : 65 (ECTA)
திருச்சட்டத்தின் பயன் ஆண்டவரே! உமது வாக்குறுதிக்கேற்ப, உம் ஊழியனுக்கு நன்மையை செய்துள்ளீர்!
சங்கீதம் 119 : 66 (ECTA)
நன் மதியையும் அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும்; ஏனெனில், உம் கட்டளைகள் மீது நம்பிக்கை வைக்கின்றேன்.
சங்கீதம் 119 : 67 (ECTA)
நீர் என்னைத் தண்டிக்குமுன்பு நான் தவறிழைத்தேன்; ஆனால், இப்போது உம் வாக்கைக் கடைப்பிடிக்கின்றேன்.
சங்கீதம் 119 : 68 (ECTA)
நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும்.
சங்கீதம் 119 : 69 (ECTA)
செருக்குற்றோர் என்னைப்பற்றிப் பொய்களைப் புனைகின்றார்கள்; நானோ முழுமனத்துடன் உம் நியமங்களைக் கடைப்பிடிக்கின்றேன்.
சங்கீதம் 119 : 70 (ECTA)
அவர்கள் இதயம் கொழுப்பேறிப் போயிற்று. நானோ உம் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுகின்றேன்.
சங்கீதம் 119 : 71 (ECTA)
எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே; அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன்.
சங்கீதம் 119 : 72 (ECTA)
நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளைவிட எனக்கு மேலானது.
சங்கீதம் 119 : 73 (ECTA)
திருச்சட்டத்தின் ஒழுங்குமுறை உம் கைகளே என்னை உருவாக்கின; என்னை வடிவமைத்தன; உம் கட்டளைகளை நான் கற்றுக்கொள்ள எனக்கு மெய்யுணர்வு தாரும்.
சங்கீதம் 119 : 74 (ECTA)
உமக்கு அஞ்சுவோர், உமது வாக்கை நான் நம்பினதற்காக என்னைக் கண்டு மகிழ்ச்சியுறுவர்.
சங்கீதம் 119 : 75 (ECTA)
ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகள் நேரியவை என அறிவேன்; நீர் என்னைச் சிறுமைப்படுத்தியது சரியே.
சங்கீதம் 119 : 76 (ECTA)
எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ!
சங்கீதம் 119 : 77 (ECTA)
நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம்.
சங்கீதம் 119 : 78 (ECTA)
செருக்குற்றோர் வெட்கிப்போவார்களாக! அவர்கள் பொய்யுரை கூறி என்னை ஒடுக்கினார்கள்; நானோ உம் நியமங்கள் பற்றிச் சிந்தனை செய்வேன்.
சங்கீதம் 119 : 79 (ECTA)
உமக்கு அஞ்சிநடப்போர், உம் ஒழுங்குமுறைகளைப்பற்றிய அறிவுடையோர் என் பக்கம் திரும்புவராக!
சங்கீதம் 119 : 80 (ECTA)
உம் நியமங்களைப் பொறுத்த மட்டில் என் உள்ளம் மாசற்றதாய் இருப்பதாக! அதனால், நான் வெட்கமுறேன்.
சங்கீதம் 119 : 81 (ECTA)
விடுதலைக்காக மன்றாடல் நீர் அளிக்கும் மீட்புக்காக என் நெஞ்சம் ஏங்குகின்றது; உம் வாக்கை நான் நம்புகின்றேன்.
சங்கீதம் 119 : 82 (ECTA)
உம் வாக்குறுதியை எதிர்நோக்கி என் கண்கள் பூத்துப்போயின; ‘எப்போது எனக்கு ஆறுதல் தருவீர்?’ என்று வினவினேன்.
சங்கீதம் 119 : 83 (ECTA)
புகைபடிந்த தோற்பைபோல் ஆனேன்; உம் விதிமுறைகளை நான் மறக்கவில்லை.
சங்கீதம் 119 : 84 (ECTA)
உம் ஊழியன் எத்தனை நாள் காத்திருக்கவேண்டும்? என்னைக் கொடுமைப்படுத்துவோரை என்று தண்டிப்பீர்?
சங்கீதம் 119 : 85 (ECTA)
உமது திருச்சட்டப்படி நடக்காமல், செருக்குற்றோர் எனக்குக் குழிவெட்டினர்;
சங்கீதம் 119 : 86 (ECTA)
உம் கட்டளைகள் எல்லாம் நம்பத்தக்கவை;
அவர்கள் பொய்யுரை கூறி என்னை ஒடுக்குகின்றனர்; எனக்குத் துணை செய்யும்.
சங்கீதம் 119 : 87 (ECTA)
அவர்கள் பூவுலகினின்று என் வாழ்வை ஏறக்குறைய அழித்துவிட்டனர்; நானோ உம் நியமங்களைக் கைவிடவில்லை.
சங்கீதம் 119 : 88 (ECTA)
உமது பேரன்புக்கேற்ப என்னை உயிரோடு வைத்திரும், நீர் திருவாய்மலர்ந்த ஒழுங்கு முறைகளை நான் கடைப்பிடிப்பேன்.
சங்கீதம் 119 : 89 (ECTA)
திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு; விண்ணுலகைப்போல் அது நிலைத்துள்ளது.
சங்கீதம் 119 : 90 (ECTA)
தலைமுறை தலைமுறையாய் உள்ளது உமது வாக்குப் பிறழாமை; நீர் பூவுலகை உறுதியாய் இருக்கச் செய்தீர், அது நிலைபெற்றுள்ளது.
சங்கீதம் 119 : 91 (ECTA)
உம் ஒழுங்குமுறைகளின்படியே அனைத்தும் இன்றுவரை நிலைத்துள்ளன. ஏனெனில், அவை உமக்கு ஊழியம் செய்கின்றன.
சங்கீதம் 119 : 92 (ECTA)
உமது திருச்சட்டம் எனக்கு இன்பம் தருவதாய் இல்லாதிருந்தால் என் துன்பத்தில் நான் மடிந்து போயிருப்பேன்.
சங்கீதம் 119 : 93 (ECTA)
உம் நியமங்களை நான் எந்நாளும் மறவேன்; ஏனெனில், அவற்றைக்கொண்டு என்னைப் பிழைக்க வைத்தீர்.
சங்கீதம் 119 : 94 (ECTA)
உமக்கே நான் உரிமை; என்னைக் காத்தருளும்; ஏனெனில், உம் நியமங்களையே நான் நாடியுள்ளேன்.
சங்கீதம் 119 : 95 (ECTA)
தீயோர் என்னை அழிக்கக் காத்திருக்கின்றனர்; நானோ உம் ஒழுங்குமுறைகளை ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.
சங்கீதம் 119 : 96 (ECTA)
நிறைவான அனைத்தின் எல்லையையும் நான் பார்த்துவிட்டேன்; உமது கட்டளையின் நிறைவோ எல்லை அற்றது.
சங்கீதம் 119 : 97 (ECTA)
திருச்சட்டத்தின் மீது அன்பு ஆண்டவரே! நான் உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்! நாள் முழுவதும் அதைப்பற்றியே சிந்திக்கின்றேன்.
சங்கீதம் 119 : 98 (ECTA)
என் எதிரிகளைவிட என்னை ஞானியாக்கியது உமது கட்டளை; ஏனெனில், என்றென்றும் அது என்னோடு உள்ளது.
சங்கீதம் 119 : 99 (ECTA)
எனக்கு அறிவு புகட்டுவோர் அனைவரினும் நான் விவேகமுள்ளனவாய் இருக்கின்றேன்; ஏனெனில், உம் ஒழுங்குமுறைகளையே நான் சிந்திக்கின்றேன்;
சங்கீதம் 119 : 100 (ECTA)
முதியோர்களைவிட நான் நுண்ணறிவு பெற்றுள்ளேன். ஏனெனில், உம் நியமங்களைக் கடைப்பிடிக்கின்றேன்.
சங்கீதம் 119 : 101 (ECTA)
உம் வாக்கைக் கடைப்பிடிக்குமாறு தீயவழி எதிலும் நான் கால் வைக்காது பார்த்துக் கொள்கின்றேன்.
சங்கீதம் 119 : 102 (ECTA)
உம் நீதிநெறிகளைவிட்டு நான் விலகவில்லை; ஏனெனில், நீர்தாமே எனக்குக் கற்றுத் தந்தீர்.
சங்கீதம் 119 : 103 (ECTA)
உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை.
சங்கீதம் 119 : 104 (ECTA)
உம் நியமங்களால் நான் நுண்ணறிவு பெறுகின்றேன். ஆகவேதான் பொய்வழிகள் அனைத்தையும் நான் வெறுக்கின்றேன்.
சங்கீதம் 119 : 105 (ECTA)
திருச்சட்டத்தின் ஒளி என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!
சங்கீதம் 119 : 106 (ECTA)
நீதியான உம் நெறிமுறைகளை நான் கடைப்பிடிப்பதாக ஆணையிட்டு உறுதிமொழி தந்துள்ளேன்.
சங்கீதம் 119 : 107 (ECTA)
ஆண்டவரே! மிக மிகத் துன்புறுத்தப்படுகின்றேன்; உம் வாக்குறுதியின்படி என்னை உயிரோடு வைத்தருளும்.
சங்கீதம் 119 : 108 (ECTA)
நான் மனமுவந்து வாயார உம்மைப் புகழ்வதை ஆண்டவரே! தயைகூர்ந்து ஏற்றுக்கொள்ளும்; உம் நீதிநெறிகளை எனக்குக் கற்பியும்.
சங்கீதம் 119 : 109 (ECTA)
நான் என்னுயிரைக் கையில்வைத்துள்ளேன்; ஆயினும், உம் திருச்சட்டத்தை நான் மறவேன்.
சங்கீதம் 119 : 110 (ECTA)
தீயோர் எனக்குக் கண்ணிவைத்தனர்; ஆனால், உம் நியமங்களினின்று நான் பிறழவில்லை.
சங்கீதம் 119 : 111 (ECTA)
உம் ஒழுங்குமறைகளை என்றும் என் உரிமைச் சொத்தாய்க் கொண்டுள்ளேன். ஆகவே, அவை என் இதயத்தை மகிழ்விக்கின்றன.
சங்கீதம் 119 : 112 (ECTA)
உம் விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் என் உள்ளம், என்றென்றும், இறுதிவரை நாட்டம் கொண்டிருக்கும்.
சங்கீதம் 119 : 113 (ECTA)
திருச்சட்டம் தரும் பாதுகாப்பு இருமனத்தோரை நான் வெறுக்கின்றேன்; உமது திருச்சட்டத்தின்மீது பற்றுக்கொண்டுள்ளேன்.
சங்கீதம் 119 : 114 (ECTA)
நீரே என் புகலிடம்; நீரே என் கேடயம்; உமது வாக்கில் நான் நம்பிக்கை வைக்கின்றேன்.
சங்கீதம் 119 : 115 (ECTA)
தீயன செய்வோரே! என்னை விட்டு விலகுங்கள்; என் கடவுளின் கட்டளைகளை நான் கடைப்பிடிப்பேன்;
சங்கீதம் 119 : 116 (ECTA)
நான் பிழைக்குமாறு, உமது வாக்குறுதிக்கேற்ப என்னைத் தாங்கியருளும்; எனது நம்பிக்கை வீண்போகவிடாதேயும்.
சங்கீதம் 119 : 117 (ECTA)
என்னைத் தாங்கிக்கொள்ளும்; நான் மீட்புப் பெறுவேன்; எந்நாளும் உம் விதிமுறைகளைக் கருத்தில் கொண்டிருப்பேன்.
சங்கீதம் 119 : 118 (ECTA)
உம் விதிமுறைகளைவிட்டு விலகுவோர் அனைவரையும் நீர் ஒதுக்கித் தள்ளுகின்றீர்; அவர்களின் சூழ்ச்சிகள் வீணாய்ப் போகும்.
சங்கீதம் 119 : 119 (ECTA)
பூவுலகின் பொல்லார் அனைவரையம் நீர் களிம்பெனக் கருதுகின்றீர்; ஆகவே, நான் உம் ஒழுங்குமுறைகள் மீது பற்றுக்கொண்டுள்ளேன்.
சங்கீதம் 119 : 120 (ECTA)
உம்மீது கொண்டுள்ள அச்சத்தால் என் உடல் சிலிர்க்கின்றது; உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு நான் அஞ்சி நடுங்குகின்றேன்.
சங்கீதம் 119 : 121 (ECTA)
திருச்சட்டத்தின்படி நடத்தல் நீதியும் நேர்மையும் ஆனவற்றையே செய்துள்ளேன்; என்னை ஒடுக்குவோர் கையில் என்னை விட்டுவிடாதேயும்.
சங்கீதம் 119 : 122 (ECTA)
உம் ஊழியனின் நலத்தை உறுதிப்படுத்தும்; செருக்குற்றோர் என்னை ஒடுக்கவிடாதேயும்.
சங்கீதம் 119 : 123 (ECTA)
நீர் தரும் விடுதலையையும் உமது நீதியான வாக்குறுதிகளையும் எதிர்பார்த்து, என் கண்கள் பூத்துப்போயின.
சங்கீதம் 119 : 124 (ECTA)
உம் பேரன்பிற்கேற்ப உம் ஊழியனுக்குச் செய்தருளும்; உம் விதிமுறைகளை எனக்குக் கற்பியும்.
சங்கீதம் 119 : 125 (ECTA)
உம் ஊழியன் நான், எனக்கு நுண்ணறிவு புகட்டும்; அப்போது உம் ஒழுங்குமுறைகளை அறிந்துகொள்வேன்.
சங்கீதம் 119 : 126 (ECTA)
ஆண்டவரே! நீர் செயலாற்றும் நேரம் வந்துவிட்டது; உம் திருச்சட்டம் மீறப்பட்டுவிட்டது.
சங்கீதம் 119 : 127 (ECTA)
ஆகவே, பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன்.
சங்கீதம் 119 : 128 (ECTA)
உம் நியமங்களை எல்லாம் நீதியானவை என்று ஏற்றுக்கொண்டேன்; பொய்யான வழி அனைத்தையும் வெறுக்கின்றேன்.
சங்கீதம் 119 : 129 (ECTA)
திருச்சட்டத்தின் மீது ஆவல் உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை; ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன்.
சங்கீதம் 119 : 130 (ECTA)
உம் சொற்களைப்பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது.
சங்கீதம் 119 : 131 (ECTA)
வாயை ‛ஆ’வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்; ஏனெனில், உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன்.
சங்கீதம் 119 : 132 (ECTA)
உம் பெயரின்மீது பற்றுக்கொண்டோருக்கு நீர் வழக்கமாய்ச் செய்வதுபோல், என் பக்கம் திரும்பி எனக்கும் இரங்கும்!
சங்கீதம் 119 : 133 (ECTA)
உமது வாக்கில் என் காலடிகளை நிலைப்படுத்தும்! தீயது எதுவும் என்னை மேற்கொள்ளவிடாதேயும்!
சங்கீதம் 119 : 134 (ECTA)
மனிதர் செய்யும் கொடுமையினின்று என்னை விடுவியும்! உம் நியமங்களை நான் கடைப்பிடிப்பேன்.
சங்கீதம் 119 : 135 (ECTA)
உம் ஊழியன்மீது உமது முகஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும்.
சங்கீதம் 119 : 136 (ECTA)
உமது திருச்சட்டத்தைப் பலர் கடைப்பிடிக்காததைக் கண்டு, என் கண்களினின்று நீர் அருவியாய் வழிந்தது.
சங்கீதம் 119 : 137 (ECTA)
திருச்சட்டத்தின் ஒழுங்குமுறை ஆண்டவரே! நீர் நீதி உள்ளவர்; உம் நீதிநெறிகள் நேர்மையானவை.
சங்கீதம் 119 : 138 (ECTA)
நீர் தந்த ஒழுங்குமுறைகள் நீதியானவை; அவை முற்றிலும் நம்பத்தக்கவை.
சங்கீதம் 119 : 139 (ECTA)
என் பகைவர் உம் வார்த்தைகளை மறந்துவிட்டதால், அவற்றின்மீது நான் கொண்டுள்ள தணியாத ஆர்வம் என்னை எரித்துவிடுகின்றது.
சங்கீதம் 119 : 140 (ECTA)
உம் வாக்குறுதி முற்றிலும் சரியென மெய்ப்பிக்கப்பட்டுள்ளது, உம் ஊழியன் அதன்மீது பற்றுக்கொண்டுள்ளான்.
சங்கீதம் 119 : 141 (ECTA)
சிறியன் அடியேன்! இழிவுக்கு உள்ளானவன்; ஆனால், உம் நியமங்களை மறக்காதவன்.
சங்கீதம் 119 : 142 (ECTA)
உமது நீதி என்றுமுள நீதி; உமது திருச்சட்டம் என்றும் நம்பத்தக்கது.
சங்கீதம் 119 : 143 (ECTA)
துன்பமும் கவலையும் என்னைப் பற்றிக்கொண்டன; எனினும் உம் கட்டளைகள் என்னை மகிழ்விக்கின்றன.
சங்கீதம் 119 : 144 (ECTA)
உம் ஒழுங்குமுறைகள் எக்காலமும் நீதியுள்ளவை; நான் வாழுமாறு எனக்கு நுண்ணறிவு புகட்டும்.
சங்கீதம் 119 : 145 (ECTA)
விடுதலைக்காக மன்றாடல் முழு இதயத்தோடு உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்; உம் விதிமுறைகளை நான் பின்பற்றுவேன்.
சங்கீதம் 119 : 146 (ECTA)
உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; என்னைக் காத்தருளும்; உம் ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடித்தேன்.
சங்கீதம் 119 : 147 (ECTA)
வைகறையில் நான் உம்மிடம் வந்து உதவிக்காக மன்றாடுகின்றேன்; உம் சொற்களில் நம்பிக்கை வைக்கின்றேன்.
சங்கீதம் 119 : 148 (ECTA)
உம் வாக்குறுதிகளைச் சிந்திப்பதற்காக, இரவுச் சாம நேரங்களில் நான் கண்விழித்துள்ளேன்.
சங்கீதம் 119 : 149 (ECTA)
ஆண்டவரே! உமது பேரன்பிற்கேற்ப என் குரலைக் கேட்டருளும்; உமது நீதியின்பபடி என்னுயிரைக் காத்தருளும்.
சங்கீதம் 119 : 150 (ECTA)
சதிசெய்து ஒடுக்குவோர் என்னை நெருங்கி வருகின்றனர்; உம் திருச்சட்டத்துக்கும் அவர்களுக்கும் வெகு தொலைவு.
சங்கீதம் 119 : 151 (ECTA)
ஆண்டவரே! நீர் என் அருகில் இருக்கின்றீர்; உம் கட்டளைகள் எல்லாம் நிலையானவை.
சங்கீதம் 119 : 152 (ECTA)
அவற்றை நீர் எக்காலத்திற்குமாக ஏற்படுத்தினீர் என்று நீர் தந்த ஒழுங்குமுறைகளினின்று முன்பே நான் அறிந்திருக்கின்றேன்.
சங்கீதம் 119 : 153 (ECTA)
உதவிக்காக மன்றாடல் என் துன்ப நிலையைப் பார்த்து என்னை விடுவித்தருளும்; ஏனெனில், உமது திருச்சட்டத்தை நான் மறக்கவில்லை.
சங்கீதம் 119 : 154 (ECTA)
எனக்காக வழக்காடி என்னை மீட்டருளும்; உமது வாக்குக்கேற்றபடி என் உயிரைக் காத்தருளும்.
சங்கீதம் 119 : 155 (ECTA)
தீயோர்க்கு மீட்பு வெகு தொலைவில் உள்ளது; ஏனெனில், அவர்கள் உம் விதிமுறைகளைத் தேடுவதில்லை.
சங்கீதம் 119 : 156 (ECTA)
ஆண்டவரே! உம் இரக்கம் மிகப் பெரியது; உம் நீதித்தீர்ப்புகளின்படி எனக்கு வாழ்வளியும்.
சங்கீதம் 119 : 157 (ECTA)
என்னைக் கொடுமைப்படுத்துவோரும் பகைப்போரும் பலர்; ஆனால், உம் ஒழுங்குமுறைகளை விட்டு நான் தவறுவதில்லை.
சங்கீதம் 119 : 158 (ECTA)
துரோகம் செய்வோரை அருவருப்புடன் பார்க்கின்றேன்; ஏனெனில், அவர்கள் உம் வாக்கைக் கடைப்பிடிப்பதில்லை.
சங்கீதம் 119 : 159 (ECTA)
ஆண்டவரே! நான் உம் கட்டளைகள்மீது எத்துணைப் பற்றுக்கொண்டுள்ளேன் என்பதைப் பாரும்; உம் பேரன்பிற்கேற்ப எனக்கு வாழ்வளியும்.
சங்கீதம் 119 : 160 (ECTA)
உண்மையே உமது வார்த்தையின் உட்பொருள்; நீதியான உம் நெறிமுறைகள் எல்லாம் என்றும் நிலைத்துள்ளன.
சங்கீதம் 119 : 161 (ECTA)
திருச்சட்டத்தின்மீது பேரன்பு தலைவர்கள் என்னைக் காரணமின்றிக் கொடுமைப்படுத்துகின்றனர்; ஆனால், உம் வாக்கை முன்னிட்டு என் உள்ளம் நடுங்குகின்றது.
சங்கீதம் 119 : 162 (ECTA)
திரண்ட கொள்ளைப் பொருளை அடைந்தவன் மகிழ்வதுபோல உமது வாக்குறுதியில் நான் மகிழ்ச்சியுறுகின்றேன்.
சங்கீதம் 119 : 163 (ECTA)
பொய்யை வெறுத்து ஒதுக்குகின்றேன்; உமது திருச்சட்டத்தின்மீது பற்றுக்கொண்டுள்ளேன்.
சங்கீதம் 119 : 164 (ECTA)
நீதியான உம் நெறிமுறைகளைக் குறித்து ஒரு நாளைக்கு ஏழுமுறை உம்மைப் புகழ்கின்றேன்.
சங்கீதம் 119 : 165 (ECTA)
உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு; அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை.
சங்கீதம் 119 : 166 (ECTA)
ஆண்டவரே! நீர் அளிக்கும் மீட்புக்காக நான் காத்திருக்கின்றேன்; உம் கட்டளைகளைச் செயல்படுத்துகின்றேன்.
சங்கீதம் 119 : 167 (ECTA)
உம் ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடித்து வருகின்றேன்; நான் அவற்றின்மீது பற்றுக்கொண்டுள்ளேன்.
சங்கீதம் 119 : 168 (ECTA)
உம் நியமங்களையும் ஒழுங்குமுறைகளையும் நான் கடைப்பிடிக்கின்றேன்; ஏனெனில், என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவை.
சங்கீதம் 119 : 169 (ECTA)
உதவிக்காக மன்றாடல் ஆண்டவரே! என் வேண்டுதல் உம் திருமுன் வருவதாக! உமது வாக்குறுதிக்கேற்ப எனக்கு நுண்ணறிவு புகட்டும்.
சங்கீதம் 119 : 170 (ECTA)
என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக! உம் வாக்குறுதியின்படி என்னை விடுவியும்.
சங்கீதம் 119 : 171 (ECTA)
உம் விதிமுறைகளை எனக்கு நீர் கற்பிப்பதால், என் இதழ்களினின்று திருப்புகழ் பொங்கிவரும்.
சங்கீதம் 119 : 172 (ECTA)
உம் வாக்கைக் குறித்து என் நா பாடுவதாக! ஏனெனில், உம் கட்டளைகள் எல்லாம் நீதியானவை.
சங்கீதம் 119 : 173 (ECTA)
உம் கரம் எனக்குத் துணையாய் இருப்பதாக! ஏனெனில், உம் நியமங்களை நான் தேர்ந்தெடுத்தேன்.
சங்கீதம் 119 : 174 (ECTA)
ஆண்டவரே! உம்மிடமிருந்து வரும் மீட்பை நான் நாடுகின்றேன்; உமது திருச்சட்டத்தில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
சங்கீதம் 119 : 175 (ECTA)
உயிர் பிழைத்து நான் உம்மைப் புகழ்வேனாக! உம் நீதி நெறிகள் எனக்குத் துணைபுரிவனவாக!
சங்கீதம் 119 : 176 (ECTA)
காணாமல்போன ஆட்டைப் போல் நான் அலைந்து திரிகின்றேன்; உம் ஊழியனைத் தேடிப்பாரும்; ஏனெனில், உம் கட்டளைகளை நான் மறக்கவில்லை.
❮
❯