சங்கீதம் 114 : 1 (ECTA)
பாஸ்காப் பாடல் எகிப்து நாட்டைவிட்டு இஸ்ரயேலர் வெளியேறியபொழுது, வேற்று மொழி பேசிய மக்களை விட்டு யாக்கோபின் குடும்பம் புறப்பட்டபொழுது, [* விப 12: 51 ]
சங்கீதம் 114 : 2 (ECTA)
யூதா அவருக்குத் தூயகம் ஆயிற்று; இஸ்ரயேல் அவரது ஆட்சித்தளம் ஆனது.
சங்கீதம் 114 : 3 (ECTA)
செங்கடல் கண்டது; ஓட்டம் பிடித்தது; யோர்தான் பின்னோக்கிச் சென்றது. [* விப 14:21; யோசு 3: 16 ]
சங்கீதம் 114 : 4 (ECTA)
மலைகள் செம்மறிக் கிடாய்கள் போலும் குன்றுகள் ஆட்டுக்குட்டிகள் போலும் துள்ளிக் குதித்தன.
சங்கீதம் 114 : 5 (ECTA)
கடலே! நீ விலகி ஓடும்படி உனக்கு நேர்ந்தது என்ன? யோர்தானே! நீ பின்னோக்கிச் சென்றது ஏன்?
சங்கீதம் 114 : 6 (ECTA)
மலைகளே! நீங்கள் செம்மறிக் கிடாய்கள்போல் குதித்தது ஏன்? குன்றுகளே! நீங்கள் ஆட்டுக் குட்டிகள் போல் துள்ளியது ஏன்?
சங்கீதம் 114 : 7 (ECTA)
பூவுலகே! தலைவர் முன்னிலையில் நடுநடுங்கு! யாக்கோபின் கடவுள் முன்னிலையில் நடுக்கமுறு!
சங்கீதம் 114 : 8 (ECTA)
அவர் பாறையைத் தண்ணீர்த் தடாகம் ஆக்குகின்றார்; கற்பாறையை வற்றாத நீர்ச்சுனை ஆக்குகின்றார். [* விப 17:1-7; எண் 20:2-13.. ]
❮
❯
1
2
3
4
5
6
7
8