{ஆண்டவரைப் போற்றுதல்} [PS] [QS][SS] அல்லேலூயா! நெஞ்சார[SE][SS] ஆண்டவருக்கு[SE][SS] நன்றி செலுத்துவேன்;[SE][SS] நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும்[SE][SS] அவருக்கு நன்றி செலுத்துவேன்.[SE][QE]
சங்கீதம் 111 : 2 (ECTA)
[QS][SS] ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை;[SE][SS] அவற்றில் இன்பம் காண்போர்[SE][SS] அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர்.[SE][QE]
சங்கீதம் 111 : 3 (ECTA)
[QS][SS] அவரது செயல்[SE][SS] மேன்மையும் மாண்பும் மிக்கது;[SE][SS] அவரது நீதி என்றென்றும்[SE][SS] நிலைத்துள்ளது.[SE][QE]
சங்கீதம் 111 : 4 (ECTA)
[QS][SS] அவர் தம் வியத்தகு செயல்களை என்றும்[SE][SS] நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்;[SE][SS] அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர்.[SE][QE]
சங்கீதம் 111 : 5 (ECTA)
[QS][SS] அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு[SE][SS] உணவு அளிக்கின்றார்;[SE][SS] தமது உடன்படிக்கையை[SE][SS] என்றும் நினைவில் கொள்கின்றார்;[SE][QE]
சங்கீதம் 111 : 6 (ECTA)
[QS][SS] வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத்[SE][SS] தம் மக்களுக்கு அளித்தார்;[SE][SS] இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை[SE][SS] அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.[SE][QE]
[QS][SS] என்றென்றும் எக்காலமும்[SE][SS] அவை நிலைமாறாதவை;[SE][SS] உண்மையாலும் நீதியாலும்[SE][SS] அவை உருவானவை.[SE][QE]
சங்கீதம் 111 : 9 (ECTA)
[QS][SS] தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்;[SE][SS] தம் உடன்படிக்கை[SE][SS] என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்;[SE][SS] அவரது திருப்பெயர் தூயது;[SE][SS] அஞ்சுதற்கு உரியது.[SE][QE]