சங்கீதம் 110 : 1 (ECTA)
ஆண்டவரும் அவர் தேர்ந்து கொண்ட அரசரும்
(தாவீதின் புகழ்ப்பா)
ஆண்டவர் என் தலைவரிடம், ‛நான் உம் பகைவரை உமக்குப் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்’ என்று உரைத்தார். [* மத் 22:44; மாற் 12:36; லூக் 20:42-43; திப 2:34-35; 1 கொரி 15:25; எபே 1:20-22; கொலோ 3:1; எபி 1:13; 8:1; 10:12- 13 ]
சங்கீதம் 110 : 2 (ECTA)
வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஒங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!
சங்கீதம் 110 : 3 (ECTA)
நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.
சங்கீதம் 110 : 4 (ECTA)
‛மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே’ என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார். [* எபி 5:6; 6:20; 7:17,21.. ]
சங்கீதம் 110 : 5 (ECTA)
என் தலைவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; தம் சினத்தின் நாளில் மன்னர்களை நொறுக்குவார்.
சங்கீதம் 110 : 6 (ECTA)
வேற்று நாடுகளுக்கு அவர் தீர்ப்பளித்து அவற்றைப் பிணத்தால் நிரப்புவார்; பாருலகெங்கும் தலைவர்களை அவர் நொறுக்குவார்.
சங்கீதம் 110 : 7 (ECTA)
வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் பருகுவார்; ஆகவே அவர் தலைநிமிர்ந்து நிற்பார்.

1 2 3 4 5 6 7