சங்கீதம் 108 : 1 (ECTA)
பகைவரிடமிருந்து விடுவிக்குமாறு வேண்டல்
(தாவீதின் புகழ்ப்பாடல்)
(திப 57:7-11; 60:5-12)
என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது; கடவுளே! என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது; நான் பாடுவேன்.
உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
என் நெஞ்சே! விழித்தெழு; [* 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 100:5; 106:1; 118:1; 136:1; எரே 33:11.. ]
சங்கீதம் 108 : 2 (ECTA)
வீணையே! யாழே! விழித்தெழுங்கள்; வைகறையை விழித்தெழச் செய்வேன்.
சங்கீதம் 108 : 3 (ECTA)
ஆண்டவரே, மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்; எல்லா இனத்தாரிடையேயும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
சங்கீதம் 108 : 4 (ECTA)
ஏனெனில், வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு! முகில்களைத் தொடுகின்றது உமது உண்மை!
சங்கீதம் 108 : 5 (ECTA)
கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்வு பெறுவீராக! பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக!
சங்கீதம் 108 : 6 (ECTA)
உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு உமது வலக்கையால் அவர்களுக்குத் துணை செய்யும்! என் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்!
சங்கீதம் 108 : 7 (ECTA)
கடவுள் தமது தூயகத்தினின்று இவ்வாறு உரைத்தார்; “வெற்றிக் களிப்பிடையே செக்கேமைப் பங்கிடுவேன்; சுக்கோத்துப் பள்ளத்தாக்கை அளந்து கொடுப்பேன்!
சங்கீதம் 108 : 8 (ECTA)
கிலயாது என்னுடையது; மனாசேயும் என்னுடையதே; எப்ராயிம் என் தலைச்சீரா, யூதா என் செங்கோல்!
சங்கீதம் 108 : 9 (ECTA)
மோவாபு! எனது பாதங்கழுவும் பாத்திரம்; ஏதோமின்மீது எனது மிதியடியை எறிவேன்; பெலிஸ்தியாவை வென்று ஆர்ப்பரிப்பேன்!”
சங்கீதம் 108 : 10 (ECTA)
அரண்சூழ் நகரினுள் என்னை இட்டுச் செல்பவர் யார்? ஏதோம்வரைக்கும் என்னைக் கூட்டிச் செல்பவர் யார்?
சங்கீதம் 108 : 11 (ECTA)
கடவுளே! நீர் எங்களைக் கைவிட்டு விட்டீர் அன்றோ? கடவுளே! நீர் எங்கள் படைகளோடு புறப்படவில்லை அன்றோ?
சங்கீதம் 108 : 12 (ECTA)
எதிரியை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; மனிதர் தரும் உதவியோ வீண்;
சங்கீதம் 108 : 13 (ECTA)
கடவுளின் துணையால் வீரத்துடன் போரிடுவோம்; அவரே நம் எதிரிகளை மிதித்துவிடுவார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13