சங்கீதம் 107 : 1 (ECTA)
ஐந்தாம் பகுதிகடவுளின் கருணையைப் புகழ்தல் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. [* 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 100:5; 106:1; 118:1; 136:1; எரே 33:11.. ]
சங்கீதம் 107 : 2 (ECTA)
ஆண்டவரால் மீட்படைந்தோர், எதிரியின் கையினின்று அவரால் மீட்கப்பட்டோர்,
சங்கீதம் 107 : 3 (ECTA)
கிழக்கினின்றும் மேற்கினின்றும், வடக்கினின்றும் தெற்கினின்றும், பல நாடுகளினின்றும் ஒன்று சேர்க்கப்பட்டோர் சொல்வார்களாக.
சங்கீதம் 107 : 4 (ECTA)
பாலைநிலத்தில் பாழ் வெளியில் சிலர் அலைந்து திரிந்தனர்; குடியிருக்குமாறு ஒரு நகருக்குச் செல்ல அவர்கள் வழி காணவில்லை;
சங்கீதம் 107 : 5 (ECTA)
பசியுற்றனர்; தாகமுற்றனர்; மனச்சோர்வுற்றுக் களைத்துப்போயினர்.
சங்கீதம் 107 : 6 (ECTA)
தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர்களை அவர் விடுவித்தார்.
சங்கீதம் 107 : 7 (ECTA)
நேரிய பாதையில் அவர்களை வழிநடத்தினார்; குடியிருக்கும் நகரை அவர்கள் அடையச் செய்தார்.
சங்கீதம் 107 : 8 (ECTA)
ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடர்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக!
சங்கீதம் 107 : 9 (ECTA)
ஏனெனில், தாகமுற்றோர்க்கு அவர் நிறைவளித்தார்; பசியுற்றோரை நன்மையால் நிரப்பினார்.
சங்கீதம் 107 : 10 (ECTA)
சிலர் காரிருளிலும் சாவின் நிழலிலும் கிடந்தனர்; விலங்கிடப்பட்டுத் துன்பத்தில் உழன்றனர்.
சங்கீதம் 107 : 11 (ECTA)
ஏனெனில், அவர்கள் இறைவனின் கட்டளைகளை எதிர்த்து நின்றனர்; உன்னதரின் அறிவுரைகளைப் புறக்கணித்தனர்.
சங்கீதம் 107 : 12 (ECTA)
கடும் வேலையால் அவர் அவர்களின் உள்ளத்தைச் சிறுமைப்படுத்தினார்; அவர்கள் நிலைகுலைந்து போயினர்; அவர்களுக்குத் துணைசெய்வார் எவருமிலர்.
சங்கீதம் 107 : 13 (ECTA)
அவர்கள் தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர் அவர்களைத் துன்பங்களிலிருந்து விடுவித்தார்.
சங்கீதம் 107 : 14 (ECTA)
காரிருளிலும் சாவின் நிழலிலும் கிடந்த அவர்களை அவர் வெளிக்கொணர்ந்தார். அவர்களைப் பிணித்திருந்த தளைகளைத் தகர்த்தெறிந்தார்.
சங்கீதம் 107 : 15 (ECTA)
ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக!
சங்கீதம் 107 : 16 (ECTA)
ஏனெனில், வெண்கலக் கதவுகளை அவர் தகர்த்துவிட்டார்; இரும்புத் தாழ்ப்பாள்களை உடைத்துவிட்டார்.
சங்கீதம் 107 : 17 (ECTA)
சிலர் தங்கள் தீயநெறிகளை முன்னிட்டு நோய்களுக்கு உள்ளாயினர்; அவர்களுடைய தீச்செயல்களின் பொருட்டுத் துன்பங்களுக்கு உள்ளாயினர்.
சங்கீதம் 107 : 18 (ECTA)
எல்லா உணவையும் அவர்களின் மனம் வெறுத்தது; சாவின் வாயில்களை அவர்கள் நெருங்கினார்கள்.
சங்கீதம் 107 : 19 (ECTA)
அவர்கள் தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர் அவர்களைத் துன்பங்களினின்று விடுவித்தார்.
சங்கீதம் 107 : 20 (ECTA)
தம் வார்த்தையை அவர் அனுப்பி அவர்களைக் குணப்படுத்தினார்; அழிவினின்று அவர்களை விடுவித்தார்.
சங்கீதம் 107 : 21 (ECTA)
ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு, அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக!
சங்கீதம் 107 : 22 (ECTA)
நன்றிப் பலிகளை அவர்கள் செலுத்துவார்களாக! அக்களிப்போடு அவர்தம் செயல்களைப் புகழ்ந்தேத்துவார்களாக!
சங்கீதம் 107 : 23 (ECTA)
சிலர் கப்பலேறிக் கடல்வழிச் சென்றனர்; நீர்த்திரள்மீது வாணிகம் செய்தனர்.
சங்கீதம் 107 : 24 (ECTA)
அவர்களும் ஆண்டவரின் செயல்களைக் கண்டனர்; ஆழ்கடலில் அவர்தம் வியத்தகு செயல்களைப் பார்த்தனர்.
சங்கீதம் 107 : 25 (ECTA)
அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல் காற்று எழுந்தது; அது கடலின் அலைகளைக் கொந்தளிக்கச் செய்தது.
சங்கீதம் 107 : 26 (ECTA)
அவர்கள் வானமட்டும் மேலே வீசப்பட்டனர்; பாதாளமட்டும் கீழே தள்ளப்பட்டனர்; அவர்கள் உள்ளமோ இக்கட்டால் நிலைகுலைந்தது.
சங்கீதம் 107 : 27 (ECTA)
குடிவெறியரைப் போல் அவர்கள் தள்ளாடித் தடுமாறினர்; அவர்களின் திறனெல்லாம் பயனற்றுப் போயிற்று.
சங்கீதம் 107 : 28 (ECTA)
தம் நெருக்கடியில் அவர்கள் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்.
சங்கீதம் 107 : 29 (ECTA)
புயல்காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்; கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன.
சங்கீதம் 107 : 30 (ECTA)
அமைதி உண்டானதால் அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்; அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தார்.
சங்கீதம் 107 : 31 (ECTA)
ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு அவர்கள் அவருக்கு நன்றி செலுத்தவார்களாக!
சங்கீதம் 107 : 32 (ECTA)
மக்களின் பேரவையில் அவரைப் புகழ்ந்தேத்துவார்களாக! பெரியோரின் மன்றத்தில் அவரைப் போற்றுவார்களாக!
சங்கீதம் 107 : 33 (ECTA)
ஆறுகளை அவர் பாலை நிலமாக்கினார்; நீரோடைகளை அவர் வறண்ட தரையாக்கினார்.
சங்கீதம் 107 : 34 (ECTA)
செழிப்பான நிலத்தை உவர் நிலமாக்கினார்; அங்குக் குடியிருந்தோரின் தீச்செயலை முன்னிட்டு இப்படிச் செய்தார்.
சங்கீதம் 107 : 35 (ECTA)
பாலை நிலத்தையோ நீர்த் தடாகமாக மாற்றினார்; வறண்ட நிலத்தை நீருற்றுகளாகச் செய்தார்.
சங்கீதம் 107 : 36 (ECTA)
பசியுற்றோரை அங்கே குடியேற்றினார்; அவர்கள் அங்கே குடியிருக்க நகரொன்றை அமைத்தனர்.
சங்கீதம் 107 : 37 (ECTA)
அங்கே அவர்கள் வயலில் விதைத்தனர்; திராட்சைத் தோட்டங்களை அமைத்தனர்; அறுவடைக்கான கனிகளை அவை ஈன்றன.
சங்கீதம் 107 : 38 (ECTA)
அவர் ஆசி வழங்கினார்; அவர்கள் மிகுதியாகப் பல்கிப் பெருகினர்; அவர்களின் கால்நடைகளைக் குறைந்துபோக விடவில்லை.
சங்கீதம் 107 : 39 (ECTA)
பின்பு, அவர்களின் தொகை குறைந்தது; அவர்கள் ஒடுக்கப்பட்டு, துன்புறுத்துப்பட்டு இகழ்ச்சிக்கு உள்ளாயினர்.
சங்கீதம் 107 : 40 (ECTA)
தலைவர்கள்மேல் இகழ்ச்சியைக் கொட்டி, அவர்களைப் பாதையற்ற பாழ் வெளியில் அலையச் செய்தார் அவர்.
சங்கீதம் 107 : 41 (ECTA)
ஆனால், எளியோரை அவர் துன்ப நிலையினின்று தூக்கிவிட்டார், அவர்கள் குடும்பங்களை மந்தை போல் பெருகச் செய்தார்.
சங்கீதம் 107 : 42 (ECTA)
நேர்மையுள்ளோர் இதைப் பார்த்து மகிழ்கின்றனர்; தீயோர் யாவரும் தங்கள் வாயை மூடிக்கொள்கின்றனர்.
சங்கீதம் 107 : 43 (ECTA)
ஞானமுள்ளோர் இவற்றைக் கவனத்தில் கொள்ளட்டும்! அவர்கள் ஆண்டவரின் பேரன்பை உணர்ந்து கொள்ளட்டும்!
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43