சங்கீதம் 101 : 1 (ECTA)
அரசரின் வாக்குறுதி
(தாவீதின் புகழ்ப்பா)
இரக்கத்தையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்; ஆண்டவரே, உமக்கே புகழ் சாற்றிடுவேன்.
சங்கீதம் 101 : 2 (ECTA)
மாசற்ற வழியே நடப்பதில் நான் கருத்தாயிருக்கிறேன்; எப்பொழுது நீர் என்னிடம் வருவீர்? தூய உள்ளத்தோடு என் இல்லத்தில் வாழ்வேன்.
சங்கீதம் 101 : 3 (ECTA)
இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன். நெறிதவறியவரின் செயலை நான் வெறுக்கின்றேன்; அது என்னைப் பற்றிக்கொள்ளாது.
சங்கீதம் 101 : 4 (ECTA)
வஞ்சக நெஞ்சம் எனக்கு வெகு தொலைவில் இருக்கும்; தீதான எதையும் நான் அறியேன்.
சங்கீதம் 101 : 5 (ECTA)
தமக்கு அடுத்திருப்போரை மறைவாகப் பழிப்போரை நான் ஒழிப்பேன்; கண்களில் இறுமாப்பும் உள்ளத்தில் செருக்கும் உள்ளோரின் செயலை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்; [* 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 106:1; 107:1; 118:1; 136:1; எரே 13:11.. ]
சங்கீதம் 101 : 6 (ECTA)
நாட்டில் நம்பிக்கைக்குரியோரைக் கண்டுபிடித்து என்னோடு வாழச் செய்வேன்; நேரிய வழியில் நடப்போரை எனக்குப் பணிவிடை புரியச் செய்வேன்;
சங்கீதம் 101 : 7 (ECTA)
வஞ்சனை செய்வோருக்கு என் மாளிகையில் இடமில்லை. பொய் உரைப்போர் என் கண்முன் நிலைப்பதில்லை.
சங்கீதம் 101 : 8 (ECTA)
நாட்டிலுள்ள பொல்லார் அனைவரையும் நாள்தோறும் அழிப்பேன்; ஆண்டவரின் நகரினின்று தீங்கிழைப்போரை ஒழிப்பேன்.

1 2 3 4 5 6 7 8