நீதிமொழிகள் 9 : 1 (ECTA)
ஞானமும் மதிகேடும் ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது; அதற்கென ஏழு தூண்களைச் செதுக்கியிருக்கின்றது.
நீதிமொழிகள் 9 : 2 (ECTA)
அது தன் பலிவிலங்குகளைக் கொன்று, திராட்சை இரசத்தில் இன்சுவை சேர்த்து, விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது;
நீதிமொழிகள் 9 : 3 (ECTA)
தன தோழிகளை அனுப்பிவைத்தது; நகரின் உயரமான இடங்களில் நின்று,
நீதிமொழிகள் 9 : 4 (ECTA)
“அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்” என்று அறிவிக்கச் செய்தது; மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது;
நீதிமொழிகள் 9 : 5 (ECTA)
“வாருங்கள், நான் தரும் உணவை உண்ணுங்கள்; நான் கலந்துவைத்துள்ள திராட்சை இரசத்தைப் பருகுங்கள்;
நீதிமொழிகள் 9 : 6 (ECTA)
பேதைமையை விட்டுவிடுங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள்; உணர்வை அடையும் வழியில் செல்லுங்கள்” என்றது.
நீதிமொழிகள் 9 : 7 (ECTA)
இகழ்வாரைத் திருத்த முயல்வோர் அடைவது ஏளனமே; பொல்லாரைக் கண்டிப்போர் பெறுவது வசைமொழியே.
நீதிமொழிகள் 9 : 8 (ECTA)
இகழ்வாரைக் கடிந்து கொள்ளாதே; அவர்கள் உன்னைப் பகைப்பார்கள். ஞானிகளை நீ கடிந்து கொண்டால், அவர்கள் உன்னிடம் அன்புகொள்வர்.
நீதிமொழிகள் 9 : 9 (ECTA)
ஞானிகளுக்கு அறிவுரை கூறு; அவர்களது ஞானம் வளரும்; நேர்மையாளருக்குக் கற்றுக் கொடு; அவர்களது அறிவு பெருகும்.
நீதிமொழிகள் 9 : 10 (ECTA)
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; தூயவராகிய அவரைப்பற்றிய உணர்வே மெய்யுணர்வு. * யோபு 28:28; திபா 111:10; நீமொ 1:7..
நீதிமொழிகள் 9 : 11 (ECTA)
என்னால் உன் வாழ்நாள்கள் மிகும்; உன் ஆயுட்காலம் நீடிக்கும்.
நீதிமொழிகள் 9 : 12 (ECTA)
நீங்கள் ஞானிகளாய் இருந்தால், அதனால் வரும் பயன் உங்களுக்கே உரியதாகும்; நீங்கள் ஏளனம் செய்வோராய் இருந்தால், அதனால் வரும் விளைவை நீங்களே துய்ப்பீர்கள்.
நீதிமொழிகள் 9 : 13 (ECTA)
மதிகேடு என்பதை வாயாடியான, அறிவில்லாத, எதற்கும் கவலைப்படாத ஒரு பெண்ணுக்கு ஒப்பிடலாம்.
நீதிமொழிகள் 9 : 14 (ECTA)
அவள் தன் வீட்டு வாயிற்படியிலோ, நகரின் மேடான இடத்திலோ உட்கார்ந்துகொண்டு,
நீதிமொழிகள் 9 : 15 (ECTA)
தம் காரியமாக வீதியில் செல்லும் வழிப்போக்கரைப் பார்த்து,
நீதிமொழிகள் 9 : 16 (ECTA)
“அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்” என்பாள்; மதிகேடரைப் பார்த்து,
நீதிமொழிகள் 9 : 17 (ECTA)
“திருடின தண்ணீரே இனிமை மிகுந்தது; வஞ்சித்துப் பெற்ற உணவே இன்சுவை தருவது” என்பாள்.
நீதிமொழிகள் 9 : 18 (ECTA)
அந்த ஆள்களோ, அங்கே செல்வோர் உயிரை இழப்பர் என்பதை அறியார்; அவளுடைய விருந்தினர் பாதாளத்தில் கிடக்கின்றனர் என்பது அவர்களுக்குத் தெரியாது.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18