நீதிமொழிகள் 6 : 1 (ECTA)
சில நல்லுரைகள் பிள்ளாய்! உன் அடுத்திருப்பவரின் கடனுக்காக நீ பொறுப்பேற்றிருந்தால், அல்லது அன்னியர் ஒருவருக்காகப் பிணையாய் நின்றால்,
நீதிமொழிகள் 6 : 2 (ECTA)
அல்லது உன் வார்த்தைகளை முன்னிட்டு ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டால், அல்லது உன் வாய்ச் சொல்லிலேயே நீ பிடிபட நேரிட்டால்,
நீதிமொழிகள் 6 : 3 (ECTA)
பிள்ளாய்! உன்னை விடுவித்துக் கொள்ள இப்படிச் செய்; நீ அடுத்திருப்பவரின் கையில் அகப்பட்டுக் கொண்டதால், விரைந்தோடிச் சென்று அவரை வருந்தி வேண்டிக்கொள்.
நீதிமொழிகள் 6 : 4 (ECTA)
அதைச் செய்யும் வரையில் கண்ணயராதே; கண் இமைகளை மூடவிடாதே.
நீதிமொழிகள் 6 : 5 (ECTA)
நீ வேடன் கையில் அகப்பட்ட மான் போலிருப்பாய்; கண்ணியில் சிக்கிய குருவிக்கு ஒப்பாவாய்; உன்னைத் தப்புவித்துக் கொள்ளப்பார். * ‘கையில்’ என்பது எபிரேய பாடம்..
நீதிமொழிகள் 6 : 6 (ECTA)
சோம்பேறியாயிராதே சோம்பேறிகளே, எறும்பைப் பாருங்கள்; அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவராகுங்கள்;
நீதிமொழிகள் 6 : 7 (ECTA)
அதற்குத் தலைவனுமில்லை, கண்காணியுமில்லை, அதிகாரியுமில்லை.
நீதிமொழிகள் 6 : 8 (ECTA)
எனினும், அது கோடையில் உணவைச் சேர்த்துவைக்கும்; அறுவடைக் காலத்தில் தானியத்தைச் சேகரிக்கும்.
நீதிமொழிகள் 6 : 9 (ECTA)
சோம்பேறிகளே, எவ்வளவு நேரம் படுத்திருப்பீர்கள்? தூக்கதிலிருந்து எப்போது எழுந்திருப்பீர்கள்?
நீதிமொழிகள் 6 : 10 (ECTA)
இன்னும் சிறிது நேரம் தூங்குங்கள், இன்னும் சிறிது நேரம் உறங்குங்கள்; கையை முடக்கிக்கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திருங்கள். [* நீமொ 24:33- 34 ]
நீதிமொழிகள் 6 : 11 (ECTA)
வறுமை உங்கள் மீது வழிப்பறிக் கள்வரைப்போல் பாயும்; ஏழ்மைநிலை உங்களைப் போர்வீரரைப்போல் தாக்கும். [* நீமொ 24:33- 34 ]
நீதிமொழிகள் 6 : 12 (ECTA)
கயவனின் போக்கு போக்கிரி அல்லது கயவன் தாறுமாறாகப் பேசிக்கொண்டு அலைவான்.
நீதிமொழிகள் 6 : 13 (ECTA)
அவன் கண் சிமிட்டுவான்; காலால் செய்தி தெரிவிப்பான்; விரலால் சைகை காட்டுவான்.
நீதிமொழிகள் 6 : 14 (ECTA)
அவன் தன் வஞ்சக உள்ளத்தில் சதித்திட்டம் வகுப்பான்; எங்கும் சண்டை மூட்டிவிடுவான்.
நீதிமொழிகள் 6 : 15 (ECTA)
ஆகையால் அவனுக்கு எதிர்பாராத நேரத்தில் கேடு வரும்; திடீரென்று அழிந்துபோவான்; மீளமாட்டான்.
நீதிமொழிகள் 6 : 16 (ECTA)
கடவுளுக்கு வெறுப்பானவை ஆண்டவர் வெறுப்பவை ஆறு, ஏழாவது ஒன்றும் அவரது வெறுப்புக்கு உரியது.
நீதிமொழிகள் 6 : 17 (ECTA)
அவை இறுமாப்புள்ள பார்வை, பொய்யுரைக்கும் நாவு, குற்றமில்லாரைக் கொல்லும் கை,
நீதிமொழிகள் 6 : 18 (ECTA)
சதித்திட்டங்களை வகுக்கும் உள்ளம், தீங்கிழைக்க விரைந்தோடும் கால்,
நீதிமொழிகள் 6 : 19 (ECTA)
பொய்யுரைக்கும் போலிச்சான்று, நண்பரிடையே சண்டை மூட்டிவிடும் செயல் என்பவையே.
நீதிமொழிகள் 6 : 20 (ECTA)
கற்புநெறி வழுவாமை பிள்ளாய்! உன் தந்தையின் கட்டளையைக் கடைப்பிடி; தாயின் அறிவுரையைப் புறக்கணியாதே.
நீதிமொழிகள் 6 : 21 (ECTA)
அவற்றை எப்போதும் உன் இதயத்தில் இருத்திவை; உன் கழுத்துக்கு மாலையென அணிந்து கொள்.
நீதிமொழிகள் 6 : 22 (ECTA)
நீ நடந்து செல்லும்போது அவை உனக்கு வழிகாட்டும்; நீ படுத்திருக்கும்போது அவை உன்னைக் காவல் காக்கும்; விழித்திருக்கும்போது உன்னுடன் உரையாடும்.
நீதிமொழிகள் 6 : 23 (ECTA)
கட்டளை என்பது ஒரு விளக்கு; அறிவுரை என்பது ஒளி; கண்டித்தலும் தண்டித்தலும் நல்வாழ்வுக்கு வழி.
நீதிமொழிகள் 6 : 24 (ECTA)
அவை உன்னை விலைமகளிடமிருந்து, தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்து விலகியிருக்கச் செய்யும்.
நீதிமொழிகள் 6 : 25 (ECTA)
உன் உள்ளத்தால் அவளது அழகை இச்சியாதே; அவள் கண்ணடித்தால் மயங்கிவிடாதே.
நீதிமொழிகள் 6 : 26 (ECTA)
விலைமகளின் விலை ஒரு வேளைச் சோறுதான்; ஆனால், பிறன் மனையாளோ உயிரையே வேட்டையாடி விடுவாள்.
நீதிமொழிகள் 6 : 27 (ECTA)
ஒருவன் தன் மடியில் நெருப்பை வைத்திருந்தால், அவனது ஆடை எரிந்துபோகாமலிருக்குமா?
நீதிமொழிகள் 6 : 28 (ECTA)
ஒருவன் தழல்மீது நடந்து சென்றால், அவன் கால் வெந்துபோகாமலிருக்குமா?
நீதிமொழிகள் 6 : 29 (ECTA)
பிறன்மனை நயப்பவன் செயலும் இத்தகையதே; அவளைத் தொடும் எவனும் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
நீதிமொழிகள் 6 : 30 (ECTA)
திருடன் தன் பசியைத் தீர்க்கத் திருடினால், அவனை மக்கள் பெருங்குற்றவாளியெனக் கருதாதிருக்கலாம்.
நீதிமொழிகள் 6 : 31 (ECTA)
ஆனால், அவன் பிடிபடும்போது ஏழு மடங்காகத் திருப்பிக்கொடுக்க வேண்டும்; தன் குடும்பச் சொத்து முழுவதையுமே கொடுத்துவிட நேரிடும்.
நீதிமொழிகள் 6 : 32 (ECTA)
கற்புநெறி தவறுகிறவன் மதிகேடன். அவ்வாறு செய்வோன் தன்னையே அழித்துக்கொள்கின்றான்.
நீதிமொழிகள் 6 : 33 (ECTA)
அவன் நைய நொறுக்கப்படுவான், பழிக்கப்படுவான்; அவனது இழிவு ஒருபோதும் மறையாது.
நீதிமொழிகள் 6 : 34 (ECTA)
ஏனெனில், தன் மனைவி தனக்கே உரியவள் என்னும் உணர்ச்சி ஒரு கணவனிடம் சினவெறியை உண்டாக்கும்; பழி தீர்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் நாளில், அவன் இரக்கம் காட்டமாட்டான்;
நீதிமொழிகள் 6 : 35 (ECTA)
சரியீடு எதுவும் ஏற்றுக் கொள்ளமாட்டான்; எவ்வளவு பொருள் கொடுத்தாலும் அவன் சினம் தணியாது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35