நீதிமொழிகள் 5 : 1 (ECTA)
கற்புநெறி தவறாமை பிள்ளாய்! என் ஞானத்தில் உன் கவனத்தைச் செலுத்து; என் அறிவுரைக்குச் செவிகொடு.
நீதிமொழிகள் 5 : 2 (ECTA)
அப்பொழுது விவேகத்துடன் நடந்துகொள்வாய்; அறிவு உன் நாவைக் காவல்செய்யும்.
நீதிமொழிகள் 5 : 3 (ECTA)
விலைமகளின் பேச்சில் தேன் ஒழுகும்; அவள் உதடுகள் வெண்ணெயினும் மிருதுவானவை.
நீதிமொழிகள் 5 : 4 (ECTA)
ஆனால் அவள் உறவின் விளைவோ எட்டியினும் கசக்கும்; இருபுறமும் கூரான வாள் வெட்டுதலை ஒக்கும்
நீதிமொழிகள் 5 : 5 (ECTA)
அவள் கால் சாவை நோக்கிச் செல்லும்; அவள் காலடி பாதாளத்திற்கு இறங்கிச் செல்லும்.
நீதிமொழிகள் 5 : 6 (ECTA)
வாழ்வுக்குச் செல்லும் பாதையை அவள் கவனத்தில் கொள்வதில்லை; அவளுடைய வழிகள் மாறிகொண்டே இருக்கும்; அதைப்பற்றி அவளுக்குக் கவலையே இல்லை.
நீதிமொழிகள் 5 : 7 (ECTA)
ஆகையால், பிள்ளாய்!* எனக்குச் செவிகொடு; நான் சொல்வதற்கேற்ப நடக்க மறவாதே. * “பிள்ளாய்!” என்பது “பிள்ளைகளே!” என்று எபிரேய பாடத்தில் உள்ளது..
நீதிமொழிகள் 5 : 8 (ECTA)
அவளிடமிருந்து நெடுந்தொலையில் இருந்துகொள்; அவள் வீட்டு வாயிற்படியை மிதியாதே.
நீதிமொழிகள் 5 : 9 (ECTA)
இல்லையேல், பிறர் முன்னிலையில் உன் மானம் பறிபோகும்; கொடியவர் கையில் உன் உயிரை இழப்பாய்.
நீதிமொழிகள் 5 : 10 (ECTA)
அன்னியர் உன் சொத்தைத் தின்று கொழுப்பார்கள்; நீ பாடுபட்டுச் சம்பாதித்தது வேறொரு குடும்பத்திற்குப் போய்ச் சேரும்.
நீதிமொழிகள் 5 : 11 (ECTA)
நீ எலும்பும் தோலுமாய் உருக்குலைந்து போவாய்; உன் வாழ்க்கையின் இறுதியில் கலங்கிப் புலம்புவாய்.
நீதிமொழிகள் 5 : 12 (ECTA)
“ஐயோ, அறிவுரையை நான் வெறுத்தேனே! கண்டிக்கப்படுவதைப் புறக்கணித்தேனே!
நீதிமொழிகள் 5 : 13 (ECTA)
கற்பித்தவர்களின் சொல்லைக் கேளாமற் போனேனே! போதித்தவர்களுக்குச் செவிகொடாமல் இருந்தேனே!
நீதிமொழிகள் 5 : 14 (ECTA)
இப்பொழுது நான் மீளாத் துயரத்தில் மூழ்கியவனாய், மக்கள் மன்றத்தில் மானமிழந்து நிற்கிறேனே” என்று அலறுவாய்.
நீதிமொழிகள் 5 : 15 (ECTA)
பிறன்மனைவி நயவாமை உன் சொந்த நீர்த்தொட்டியிலுள்ள நீரையே குடி; உன் வீட்டுக் கிணற்றிலுள்ள நல்ல தண்ணீரையே பருகு
நீதிமொழிகள் 5 : 16 (ECTA)
உன் ஊற்றுநீர் வெளியே பாயவேண்டுமா? உன் வாய்க்காலின் நீர் வீதியில் வழிந்தோடவேண்டுமா?
நீதிமொழிகள் 5 : 17 (ECTA)
அவை உனக்கே உரியவையாயிருக்கட்டும்; அன்னியரோடு அவற்றைப் பகிர்ந்துகொள்ளாதே.
நீதிமொழிகள் 5 : 18 (ECTA)
உன் நீருற்று ஆசி பெறுவதாக! இளமைப் பருவத்தில் நீ மணந்த பெண்ணோடு மகிழ்ந்திரு.
நீதிமொழிகள் 5 : 19 (ECTA)
அவளே உனக்குரிய அழகிய பெண் மான், எழில்மிகு புள்ளிமான்; அவளது மார்பகம் எப்போதும் உனக்கு மகிழ்வூட்டுவதாக! அவளது அன்பு உன்னை எந்நாளும் ஆட்கொண்டிருப்பதாக!
நீதிமொழிகள் 5 : 20 (ECTA)
மகனே, விலைமகளைப் பார்த்து நீ மயங்குவதேன்? பரத்தையை நீ அணைத்துக்கொள்வதேன்?
நீதிமொழிகள் 5 : 21 (ECTA)
மனிதரின் வழிகளுள் ஒன்றும் ஆண்டவர் கண்களுக்குத் தப்புவதில்லை; அவர்களுடைய பாதைகளையெல்லாம் அவர் சீர்தூக்கிப் பார்க்கின்றார்.
நீதிமொழிகள் 5 : 22 (ECTA)
பொல்லார் தம் குற்றச் செயல்களில் தாமே சிக்கிக்கொள்வர்; தம் பாவ வலையில் தாமே அகப்பட்டுக்கொள்வர்.
நீதிமொழிகள் 5 : 23 (ECTA)
கட்டுப்பாடு இல்லாததால் அவர்கள் மடிந்து போவர்; தம் மதிகேட்டின் மிகுதியால் கெட்டழிவர்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23